Header Ads



ஒரு சிறுவன் கூறிய வார்த்தை மதுபான விடுதி உரிமையாளரை, குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்கச் செய்தது


 Mohamedali Mohamed

மது ஹராம் என்று சிறுவன் கூறிய வார்த்தை வைத்து திருகுர்ஆன் ஓதி இஸ்லாத்தை குடும்பத்துடன் ஏற்று கொண்ட மதுபான பார் உரிமையாளர்..

ஆஸ்திரேலியா சேர்ந்த பிலிஸ் விஸ்ட் என்ற மதுபான பார் உரிமையாளர் ரிட் லி குடும்பத்தினர் உடன் இஸ்லாத்தை ஏற்று கொண்டார் அவர் இஸ்லாத்தை ஏற்று கொண்ட பள்ளிவாசலில் உள்ள புகை படத்துடன் துருக்கி ஊடகத்திற்கு அளித்த பேட்டி விபரம்..

நான் ஆஸ்திரேலியா பார பகுதியில் மிக பெரிய மதுபானம் பார் நடத்தி வந்தேன் பெரிய பொருளாதாரம் வரும் பார்டி டிஸ்கோ, என சில நேரங்களில் விபச்சாரம் கூட நடக்கும், இது எல்லாம் எனக்கு எப்போதும் பெரிதாக தெரிந்தது இல்லை நான் பணம் பணம் பணத்தை தாண்டி என் குடும்பம் உடன் நேரத்தை செலவு செய்வது தான் வாழ்க்கை என உருண்டோடியது என் மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் தான் எனக்கு எல்லாம் அவர்கள் வாழ்க்கை குறித்து தான் அதிகம் சிந்திப்பேன் இந்த நேரத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா கிழக்கு பகுதியான ரீக் பகுதியில் சுற்றுலா சென்ற போது..

அங்கே என் பிள்ளைகள் உடன் கடற்கரையில் விளையாடி கொண்டு, என் மனைவி உடன் மது அருந்தி, என் மூத்த மகள் மது அருந்தி, நாங்கள் பொழுது போக்கி கொண்டு இருந்தோம் இந்த நேரத்தில் பொருள் ஒன்று வாங்க கடற்கரை ஓரத்தில் உள்ள கடைக்கு சென்றேன், பிள்ளைகள் மனைவியும் விளையாடி கொண்டு இருந்தனர்..

நான் மது அருந்தி இருந்ததால் கொஞ்சம் நிலை தடுமாறும் அளவுக்கு இருந்தது, அந்த கடையில் என் குழந்தைகளுக்கு பொருள் வாங்கி கொண்டு இருக்கும் போது, என்னுடன் பலர் அருகில் நின்று இருந்தனர், ஒரு சிறுவன் கடைக்குள் வந்தான் என் பக்கத்தில் வந்து நின்றதும், நான் நிற்கும் நிலை பார்த்து என்னை மிகவும் கேவலமாக ஒரு பார்வை பார்த்து விட்டு தள்ளி சென்றான், எனக்கு பெரிய வருத்தம் ஆகி விட்டது பொருள் வாங்கியது விட்டு விட்டு அந்த சிறுவன் இடத்தில் ஏன் என்னை அப்படி கேவலமாக பார்த்தாய் என கேட்டேன், உடனே அந்த சிறுவன் நான் ஒரு முஸ்லிம், எங்கள் இறைவன் மது ஹராம் என திருகுர்ஆனில் இருக்கிறான், மது அருந்துபவர்கள் நல்லவர்களாக இருக்க முடியாது, அதனால் உங்கள் இடத்தில் ஒதிங்கினேன் என கூறினான்..

மூன்று குழந்தைகள் தந்தை நான் என்னை அந்த சிறுவன் நல்லவனாக இருக்க முடியாது என கூறுகிறானே என கூறி, அந்த இடத்தை விட்டு சென்று எங்கள் ரூம்க்கு சென்றோம். அன்று இரவு எங்கள் ஊருக்கு செல்லாமல் அங்கே தங்கி இரவு எல்லாம் ஆன்லைனில் திருகுர்ஆனை என் குடும்பம் உடன் படித்தேன். அதில் மது மட்டும் இல்லாமல் மிக பெரிய வார்த்தைகள் இருந்தது காலையில் விடியும் போது. என் மனைவி நான் என் மூத்த மகள் ஆலோசித்து இஸ்லாத்தை ஏற்று கொள்வோம் அது தான் சத்தியம் என முடிவு எடுத்து. அருகிலேயே சில தெருக்கள் தள்ளி பள்ளிவாசல் ஒன்று இருப்பதை கண்டு பிடித்து. அங்கே இருந்தவர்கள் இடத்தில் இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என கூறினோம். 

அவர்கள் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சத்திய கலிமாவை சொல்லி கொடுத்தனர். அப்போது புகை படத்தை எடுத்து வைத்து கொண்டேன், எங்கள் பகுதிக்கு வந்து முதல் வேலையாக மதுபான பாரை விற்று ஹலாலான தொழில் ஒன்றை துவங்கி சில வாரங்களாக இஸ்லாத்தை முழுமையாகப் படித்து, இப்போது தான் உலக வாழ்க்கை குறித்து அறிந்து கொண்டு உள்ளோம் என பேட்டி கொடுத்து உள்ளார்..

يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ‌ قُلْ فِيْهِمَآ اِثْمٌ کَبِيْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَاِثْمُهُمَآ اَکْبَرُ مِنْ نَّفْعِهِمَا  وَيَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ  قُلِ الْعَفْوَ‌ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّکُمْ تَتَفَكَّرُوْنَۙ‏

(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” 

(அல்குர்ஆன் : 2:219)

ஒரு சிறுவன் சொன்ன வார்த்தை, அவனை அவர்கள் பெற்றோர்கள் திருகுர்ஆன் சொல்லி கொடுத்து வளர்த்த விதம், இன்று குடும்பமே இஸ்லாத்தை ஏற்று கொண்டு உள்ளது, நம் வாழ்வின் நிலையை சுய பரிசோதனை செய்து இனி வரும் நாட்களில் மார்க்கத்தை இறை மறை உடன் வாழ்வோம்..

No comments

Powered by Blogger.