Header Ads



கம்பளை பஸ் விபத்தில் ஸஹீதாகிய இப்திகார்

 


தம்பி இப்திகார் நுவரெலியா - சில்மியாபுரையைச் சேர்ந்தவன், காத்தான்குடி அல்மனாரில் நான் கடமையாற்றும் போது உயர் தர கற்கைக்காக வந்து இணைகிறான். நல்ல இபாதத்தான பிள்ளை; எப்போதும் பெற்றோர்கள் அழைப்பை ஏற்படுத்தியே வருவார்கள்; "சேர் நல்லா படிக்கச் சொல்லுங்க" கொஞ்சம் வழிகாட்டுங்க" என்று அடிக்கடி கூறிக்கொண்டேயிருப்பார்கள்.


ஸஹ்றானின் குண்டு வெடிப்பின் பின் கல்லூரியிலிருந்து வெளியூர் மாணவர்கள் அனைவரும் இடைவிலகுகின்றனர். நிறைய மாணவர்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டாலும் இப்திகாரின் தந்தையும் தாயும் என்னோடு கொண்டிருந்த அன்பின் நிமித்தம் ஆகக் குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாது அழைப்பை ஏற்படுத்தி வருவார்கள். அதனால் அந்த உறவு இந்த நிமிடம் வரை தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.


அவனும் என்ன முடிவுகள் எடுப்பதென்றாலும் என்னைக் கேட்காமல் எடுத்தது கிடையாது. பெற்றோரும் " சேர்ட்ட ஒரு மசூறா கேட்டுக்க" என எப்போதும் தன்னை அறிவுறுத்துவதாக சொல்லிக்கொள்வான். இது வரை இரண்டு தடவைகள அவனது வீட்டுக்கு விஜயம் செய்திருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதமும் செல்வதாக உத்தேசித்திருந்தேன். 


நான் கத்தார் வந்த காலப் பகுதியில் அவனும் வருகிறான். "லூ லூ" ஹைப்பர் மார்க்கட்டில் காசாளராக கடமையாற்றுகிறான். ஒவ்வொரு கிழமையும் சந்திப்போம்; சேர் நெஹான் எங்க? எங்க? என்று எப்போதும் நெஹானைப் பற்றியே கேட்டுக்கொண்டிருப்பான். நெஹான் கட்டாருக்கு வந்ததும் ஓரிரு தடவைகள் அவனைக் கொண்டு சென்று காட்டினோம். இன்ஷா அல்லாஹ் வெக்கேசன் வந்ததும் நெஹானை கூட்டிட்டு ஊட்ட வாரம் என்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் வாக்களித்திருந்தேன்.


இரண்டு வாரத்துக்கு முன்னர் கொழும்பில் ஒரு வேல கிடச்சிரிக்கி என்ன செய்வம்? உங்கட மசூறா என்ன சேர்? என கேட்டான். நானும் ஒரு எக்ஸ்பீரியன்சுக்காக கடமையாற்று; உனக்கும் வயசிருக்கு தானே என்கிறேன். பின்பு கத்தார் வர உத்தேசித்துள்ளேன் சேர் என்றான். தாராளமாக வா என்னால் முடியுமான உதவிகளை செய்கிறேன் என்கிறேன்.


எப்போதும் இன்ஷா அல்லாஹ்; இன்ஷா அல்லாஹ் என கூறிக்கொண்டேயிருப்பான். தொழுகையில் நல்ல பேணுதல்; இன்று இடம்பெற்ற கம்பளை பஸ் விபத்தில் ஸஹீதாகியுள்ளான். நண்பரொருவர் அழைப்பை ஏற்படுத்தி சொல்கிறார்; அப்படியே உடைந்து போகிறேன்.


இன்ஷா அல்லாஹ் நானும் உன்னை போல நல்லமல்கள் தொடர்ந்தும் செய்தால் உன்னை சுவனத்தில் சந்திக்கலாம் என பிரார்த்திக்கிறேன்.


இன்னா லில்லாஹ்.....

No comments

Powered by Blogger.