Header Ads



ஆயிஷாவின் படுகொலைக்கு ஜனாதிபதி அனுதாபம், சுவர்க்கம் செல்ல பிரார்த்தனை, குடும்பத்திற்கு நீதியை பெற்றுக்கொடுப்பதாக உறுதி


படுகொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விரைவான நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கு தான் உறுதியளிப்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இந்த கொடூரமான குற்றத்துக்காக அவரது குடும்பத்துக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் நேற்று (27) காலை காணாமல் போன சிறுமியின் சடலம் அட்டுலுகம பிரதேசத்திலுள்ள வயல் ஒன்றுக்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டுலுகம அலுகஸ்ஸாலி வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை 10.15 மணியளவில் தனது வீட்டில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள கடையொன்றில் கோழி இறைச்சி வாங்கச் சென்ற போதே சிறுமி காணாமல் போயிருந்தார்.

No comments

Powered by Blogger.