Header Ads



ஜனாஸா எரிப்பில் தீவிரம் காட்டிய நிமல் லான்சா, தனது வீடு தீ பற்றியதற்காக அழுது புலம்பிய காட்சி (வீடியோ)


முன்னாள் ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா தனது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை குறித்து இன்று 17-05-20222  நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, அவ்வப்போது அழுது புலம்பினார்.

நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே லங்சா இதனை கூறியுள்ளார்.

இலங்கையின் முதலாவது கொரோனா ஜனாஸா எரியூட்டப்பட்ட சம்பவம் நீர்கொழும்பில் இடம்பெற்றது. இதில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும், பலகத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட  மொஹமட் ஜமாலின் ஜனாஸா அவர்களின் குடும்பத்தினரின் அனுமதியில்லாமல் பலாத்காரமாக எரிக்கப்பட்டது. இந்த ஜனாஸாவை எரித்ததில் முக்கிய பங்கெடுத்தவர்கள் நிமல் லான்சாவும், அவரது தம்பியுமான தயா லான்சாவும் என்பது குறிப்பிடத்தக்கது.

மர்ஹூம் மொஹமட் ஜமாலின் குடும்பத்தினர், பல வாரங்களாக கொரோனா கட்டுப்பாடு என்ற பெயரில், தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.