Header Ads



அமெரிக்காவில் கலாநிதிப் பட்டம் பெற்றார் டாக்டர் ஸஹ்ரா


அக்குறணைக்கு  ஒரு  பெருமையான தருணம்.  அக்குறணையின் தவப்புதல்விகளில் ஒருவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று, தனது ஊருக்கு  கண்ணியத்தையும் கௌரவத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளார்  டாக்டர் பாத்திமா ஸஹ்ரா ஆப்தீன். 

அமெரிக்காவின் மிஸூரி - அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (Missouri University of Science and Technology, MUS&T) தனது முனைவர் பட்டப் படிப்பை, புள்ளிவிபரவியலை பிரதானமாகக் கொண்ட கணிதப் பாடத்திட்டத்தைப் பூரணப்படுத்தியதன் மூலம், பாத்திமா ஸஹ்ரா தனது  கல்வி வாழ்க்கையின் உச்சத்தை எட்டியுள்ளார்.

பாத்திமா ஸஹ்ரா ஸெய்னுல் ஆப்தீன் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை கண்டி பதியுதீன் மஹ்மூத் பெண்கள் கல்லூரியில் (1994-2004) ஆரம்பித்து, கண்டி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் (2004-2007) உயர்தரப் படிப்பைத் தொடர்ந்தார். அதன்பிறகு 2008 இல் இலங்கையின் கண்டி, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்து, தனது இளங்கலை ( BSc)ப் பட்டத்தை புள்ளிவிபரவியல் துறையில் கற்று நிபுணத்துவம் பெற்று, 2ஆம் வகுப்பு உயர்தரத்துடன் சித்தியடைந்தார்.

அவர்  BSc பட்டம் பெற்ற பிறகு, பட்டப் படிப்பின் போது பெற்ற சிறந்த மதிப்பெண்கள் காரணமாக, அதே பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பயிற்றுவிப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கடமையாற்றினார். இதற்கிடையில், அமெரிக்காவில் உள்ள மிஸூரி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (Missouri University of Science and Technology, MUS&T) முதுகலைப் படிப்பைத் தொடர உதவியாளர் பதவி (assistantship) வழங்கப்பட்டது. அதன் பிரகாரம் 2016 ஆம் ஆண்டில், அவர் அமெரிக்காவில் உள்ள MUS&T இல் சேர்ந்து தனது முதுகலைப் பட்டத்தை (M.Sc.) மே 2020 இல் புள்ளிவிபரவியலைப் பிரதானமாகக் கொண்ட பயன்பாட்டுக் கணிதத்தில், பெற்றார். பின்னர் அவர் தனது கல்வி வாழ்க்கைக்கு மகுடம் சூட்டும் வகையில், தனது ஆய்வறிக்கையை தனது சகாக்கள், பிற பேராசிரியர்கள் 5 பேர் முன்னிலையில் வெற்றிகரமாக மெய்ப்பித்தார். இதன் மூலம் மே 2022 இல் புள்ளிவிபரவியலை  பிரதானமாகக் கொண்டு கணிதத்தில்  முனைவர் (PhD) பட்டம் பெற்றார்.

பாத்திமா ஸஹ்ரா ஆப்தீன், அக்குறணை, மல்வானாஹின்னையில், கல்விப் பின்புலத்தைக் கொண்ட பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் அல் ஹாஜ் எம்.எம். ஸெய்னுல் ஆப்தீன் மற்றும் அல் ஹாஜா திருமதி G.S.M. சித்தி பௌஸுல் ஹினாயா அவர்களின் சிரேஷ்ட புதல்வியாவார்.

(தகவல் G.S.M. ஸியாத் முஹம்மத், அக்குறணை)



No comments

Powered by Blogger.