Header Ads



மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அவசரகால சட்டம் தீர்வாகாது - ஜனாதிபதியிடம் வலியுறுத்திய சட்டத்தரணிகள் சங்கம்


ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட  அவசர கால நிலையை பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

வேலைநிறுத்தம்,  பொது மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அவசர கால சட்டம் தீர்வாகாது,

அத்துடன் இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கும் போராட்டக்காரர்களை கைது செய்யவும் தடுத்து வைக்கவும்  அவசர நிலை பிரகடனப்படுத்தப்படக் கூடாது என  என சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

 அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானியை மீளப்பெற்று, மக்களின் அமைதியான முறையில் ஒன்று கூடும் சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்த முன்வர வேண்டும் என  ஜனாதிபதியை கோரியுள்ளது சட்டத்தரணிகள் சங்கம்

No comments

Powered by Blogger.