'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பான செயலணி, தனது அறிக்கையை 28 ஆம் திகதி கையளிக்கிறது
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி தனது அறிக்கையை எதிர்வரும் 28 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கவுள்ளதாக செயலணியின் உறுப்பினர்களில் ஒருவரும் செயலணியின் ஊடக இணைப்பாளருமான எரந்த நவரத்ன தெரிவித்தார்.
சிபாரிசுகள் அடங்கிய “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் அறிக்கை தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார். செயலணியின் பதவிக்காலம் இம்மாதம் முற்றுப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

Post a Comment