Header Ads



காயமடைந்தவர்கள் 140 ஆக உயர்வு - மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடரும்


காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் இதுவரையில் சுமார் 140 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமைதியான போராட்டங்கள் மீது இன்று  மேற்கொள்ளப்பட்ட வன்முறை தாக்குதல்களுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்  கண்டனம் வௌியிட்டுள்ளார்.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு அவர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.