Header Ads



பலத்த பாதுகாப்புடன் வந்த ரன்ஜன் - 1000 மில்லியன் கேட்ட நிமல் லான்சாவின் வழக்கு ஒத்திவைப்பு


Ismsthul Rahuman

    முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ரன்ஜன் ராமனாயக்காவிடம் 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தாக்கல் செய்த வழக்கு இன்று 27ம் திகதி நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நீதவான்  என்.ரி. ஹீனடிகல முன்னிலையில்

 விசாரணைக்கா எடுத்துக்கொள்ளப்பட்ட வபோது வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 30 திகதிக்கு ஒத்திவைத்தார்.

    2014 ஆண்டு மார்ச் 26ம் திகதி நீர்கொழும்பு லெய்டன் பார்க் மைதானததில் இடம்பெற்ற ஐ.தே.க. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ரன்ஜன் ராமநாயக்க உரையாற்றும் போது கூறி கூற்றினால் தனது கெளரவத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நஷ்டஈடு கோரி நிமல் லான்சா எம்.பி. இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

   இவ் வழக்கிற்கு ஆஜர்படுத்துவதற்காக ரன்ஜன் ராமநாயக்கா வெளிகட சிறைச்சாலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

 முறைப்பாட்டாளரான பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தனிபட்ட காரணங்களுக்காக இன்று மன்றில் ஆஜராகவில்லை.

No comments

Powered by Blogger.