கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை, அடக்கம் செய்யலாம் - இலங்கைக்கான WHO பிரதிநிதி ரஜியா, எனினும் உள்நாட்டில் காணப்படும் சூழமைவிற்கு ஏற்றவிதத்தில் தங்களிற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்காக தனியுரிமை நாடுகளிற்கு உள்ளது
கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது குறித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்கள் உடல்களை அடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம் என தெரிவிக்கின்றன என இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி ரஜியா பென்ட்சே தெரிவித்துள்ளார்.
எனினும் உள்நாட்டில் காணப்படும் சூழமைவிற்கு ஏற்றவிதத்தில் தங்களிற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்காக தனியுரிமை நாடுகளிற்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிலோன் டுடேயின் சுலோச்சனா மோகனிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
கேள்வி-
இலங்கை கொரோனா வைரசிற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளிற்காக உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையை பாராட்டியுள்ளது.நீங்கள் இங்கு என்ன தனித்துவமான தன்மையை பார்த்திருக்கின்றீர்கள்?
பதில்-
இலங்கை வரலாற்று ரீதியாக சிறந்த பொதுசுகாதார நோய் கண்காணிப்பு முறையை கொண்ட நாடு.
ஜனவரியில் பாதிக்கப்பட்ட நபர் குறித்த முதலாவது தகவல் வெளியாவதற்கு முன்னரே நாடு கொரோனா வைரசினை எதிர்கொள்வதற்கு தயாராகயிருப்பதற்கு இந்த கண்காணிப்பு முறை உதவியது.
இலங்கை அரசாங்கத்தின்முன்கூட்டியே தயாராகயிருந்ததன் காரணமாகவும் அதன் பதில் நடவடிக்கைகள் காரணமாகவும் இலங்கை நோய் தொற்றின் ஆரம்பகட்டத்தில் உள்ளது.
இதன் காரணமாக நாங்கள் சமூகத்திற்குள் தொற்றினை தடுப்பதற்கு நாங்கள் கடுமையாக பாடுபடவேண்டும்,கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
சுகாதார துறையினரால் சமாளிக்க கூடிய அளவிற்கு இலங்கை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது
.கேள்வி- இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அதனை எதிர்கொள்ளும் நிலையில் இலங்கை உள்ளதா?
பதில்-ஆரம்பத்திலேயே இலங்கையின் சுகாதார துறை இலங்கையில் உள்ள வளங்களை கருத்திலெடுத்ததுடன் பலவீனங்களை அடையாளம் கண்டதுடன் மோசமான சூழ்நிலைக்கு எதிர்கொள்ள தயாராகயிருந்தது.
கொரோனா வைரசினால் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளை பூர்த்திசெய்யக்கூடியளவில் இலங்கையின் சுகாதார துறையின் திறன் விஸ்தரிக்கப்பட்டது.
இனிமுன்னோக்கி நகர்கின்றபோது நாங்கள் பொதுசுகாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை தொடர்வதை உறுதி செய்யவேண்டும்.
புதிய பரவல் ஆரம்பித்து அது சமூகத்திற்குள் வேகமாக பரவுவதை தடுப்பதற்காக அடையாளம் காண்பது, சோதனையிடுவது,தனிமைப்படுத்துவது, நோயாளிகளிற்கு சிகிச்சை வழங்குவது,தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பது தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்கவேண்டும்.
கேள்வி- கொவிட் 19 காரணமாக உயிரிழந்த நோயாளிகளின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் இலங்கையில் விவாதம் காணப்படுகின்றது- உலக சுகாதார ஸ்தாபனம் இது குறித்து என்ன தெரிவிக்கின்றது?
பதில்-
கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது குறித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்கள் உடல்களை அடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம் என தெரிவிக்கின்றது.
எனினும் உள்நாட்டில் காணப்படும் சூழமைவிற்கு ஏற்றவிதத்தில் தங்களிற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்காக தனியுரிமை நாடுகளிற்கு உள்ளது.
கேள்வி- கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதில் காணப்பட்ட திறமையின்மையை காரணம் காட்டி உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியுதவியை நிறுத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்காவின் நிதியுதவியை பெறுவதற்காக இந்த குறைபாடுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்களா?
பதில் – இந்த முடிவு குறித்து எங்களின் தலைமையகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் சிரேஸ்ட தலைமை இதற்கான தீர்வுகள் குறித்து ஏற்கனவே ஆராய்ந்து வருகின்றது.
அனைத்து நாடுகளிலும் அனைத்து சமூகங்களிலும் கொவிட் 19ற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்வதே எங்களின் முதன்மையான முன்னுரிமைக்குரிய விடயம்.
கொரோனா வைரசினை எதிர்கொள்வதற்கான சேவையை அனைவரும் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காக அரசாங்கங்களிற்கும் பங்குதாரர்களிற்கும் உதவும் எங்களின் ஆணையை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.
இந்த வைரஸ் யாருக்கும் பாகுபாடு காட்டுவதில்லை.எவரும் பாதிக்கப்படலாம்.ஆகவே நாங்கள் எங்கள் அவசர நிலைக்கு உதவும் மற்றும் ஏனைய சுகாதார முன்னுரிமைகளை தொடர்வோம்.
கேள்வி-
வுகான் சந்தையிலேயே முதன்முதலாக வைரஸ் உருவானதா?
பதில்- கொவிட் 19 முதன்முதலில் சீனாவில் இனம் காணப்பட்டது.
ஆனால் இதன் மூலங்கள் என்னவென்பது தெளிவற்றதாக காணப்படுகின்றது.
இந்த ஆராய்ச்சியின் பொதுசுகாதாரம் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதை கண்டறிவது அது மீண்டும் பரவுவதை தடுப்பதற்கு அவசியம்.
இந்த சவால்கள் முன்னர் அறியப்படாத நோய்க்கிருமிகள் மூலமாகவே உருவாகின்றன.இந்த கிருமிகள் விலங்குகளில் இருந்து பரவுகின்றன.
மனிதர்கள் மத்;தியில் கொரோனா வைரசினை பரவச்செய்யும் வைரஸ்களை தடுப்பதற்கான ஆய்வுகள் அவசியம்.
கொரோனாவைரஸ் எதிலிருந்து பரவியது என்பதனை அறிவதற்கான பல ஆய்வுகள் சீனாவில் இடம்பெறுகின்றன அல்லது திட்டமிடப்பட்டுள்ளன என்பதனை நாங்கள் அறிகின்றோம்.
2019 இன் பிற்பகுதியில் வுகானில் மனிதர்கள் மத்தியில் காணப்பட்ட நோய் அறிகுறிகள் குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.
கேள்வி – கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சர்வதேச அளவில் குறைவடையும் என எதிர்பார்க்கின்றீர்களா?இந்த உலகளாவிய நோய் பரவல் எப்போது முடிவிற்கு வரும் என்பதற்கான ஏதாவது அறிகுறிகள் உள்ளனவா?
பதில்- இந்த வைரஸ் எங்களுடன் நீண்டகாலம் இருக்கப்போகின்றது.
உலகின் அனேக மக்கள் தொற்றுநோயினால் பாதிக்கப்படக்கூடிய நிலை காணப்படுகின்றது.தொற்றுநோய் இலகுவாக மீண்டும் பரவலாம்.

எரிக்கப்பட்டோர் எதிர்பார்த்திருப்பர் தமை
ReplyDeleteஎரித்தோருக்கு எதிராக இறைவன் முன்
இறுதித் தீர்ப்பு நாளில் - நியாயம் கேட்டு
தாம் விரும்பாது தமை எரிக்க இருப்போரை
தாமென்ன செய்யலாம் என தீர்மானிக்கும்
தனிஉரிமை உண்டு இன்று வாழ்வோருக்கு
உயிருடன் எரிப்பது தகாது நமக்கு பூவுலகில்
ஆயினும் உயிர் கொடுத்து எரிப்பான் நரகில்
அந்நாளில் அவன் அநியாயக்கார சமூகத்தை
ATHU APPADIENRAAL, PACHAI PACHAIYAAKA
ReplyDelete60,000 NATTUMAKKALAI, UYIRUDAN NERUPPIL
POTTU SHUTTAVARKALUKKU, MARUMAIIL
EPPADI IRUKKUM.
INDA SHAMBAVATHAI MARAKKAMUDIUMA????
ALLATHU MARAIKA MUDIUMAA????