Header Ads



நாடு முழுவதும், நாளை ஊரடங்கு சட்டம்....!

நாடு முழுவதும் நாளைய -31- தினம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாளை மறுதினம் முதல் ஜுன் 3ம் திகதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல் மறுதினம் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படும்.

பின்னர் ஜுன் 4ம் மற்றும் ஐந்தாம் திகதிகளில் நாடு முழுவதும் முழுநாளும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

ஜுன் 6ம் திகதி முதல் சகல மாவட்டங்களிலும் மீள் அறிவித்தல் வரையில் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.