சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுவன் கைது - மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 14 வயது சிறுவன் ஒருவனை நேற்று (24) கைது செய்துள்ளதாகவும் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள மருமகள் முறையிலான சிறுமியை அதே பிரதேசத்தைச் சோந்த 14 சிறுவன் காதலித்து வந்துள்ளதாகவும் சம்பவதினமான கடந்த 23 ஆம் திகதி பகல் 12 மணியளவில் கிரான்வேம்பு பகுதியிலுள்ள சிறுவனின் சகோதரனின் வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று அங்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சிறுமி உறவினரிடம் தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் நேற்று (24) முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பாலியல் கல்வி முறை அதன் விளக்கம் என்பன எல்லா சமூகத்திலும் சிறுவயது என்று பார்க்காது கற்று கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் இது போல நிறைய குற்றங்கள் எதிர்காலத்தில் வரலாம்.
ReplyDeletepaaliyal kalvi nadaimuraikku varumo illayo, westernil arimukamaana ikkalvi iruthiyil "safer sex" enum nilaikku ittuchchentriruppathe yathaartham...?
ReplyDeleteபாலியற் கல்வி? ரொம்பவும் முக்கியம்?
ReplyDelete