Header Ads



ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட, முன்னாள் கிரிக்கெட் வீரர்

ஹெரோயின் போதைப் பொருளுடன் 25 வயதான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவரை பன்னலை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் வீரர் 2018 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக சில கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள பன்னலை பொலிஸார், அவரை குளியாப்பிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தி 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இந்த நபர் கடந்த 23 ஆம் திகதி பன்னலை - ஹொரவன்டுன்ன பிரதேசத்தில் 2.7 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நீண்டகாலமாக ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பதாகவும் அவருடன் குடபொத்த பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான நபரும் கைது செய்யப்பட்டதாகவும் அந்த நபரிடம் இருந்து 2.810 கிராம் ஹெரோயினை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.