விமானிக்கு கொரோனா: பாதி வழியில் திரும்பிய விமானம்
டெல்லியிலிருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தின் விமானிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், அந்த விமானம் பாதி வழியிலே மீண்டும் டெல்லிக்குத் திருப்பப்பட்டது என பிடிஐ செய்தி முகமை கூறியுள்ளது.
மாஸ்கோவில் உள்ள இந்தியர்களை நாட்டுக்கு அழைத்தவர சென்ற இந்த விமானம் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு மேலே பறந்துகொண்டிருக்கும்போது, விமானிக்குத் தொற்று இருப்பதை ஊழியர்கள் அறிந்ததாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் இருந்து காலை 7 மணிக்கு கிளம்பிய இந்த விமானம், மதியம் 12.30 மணிக்கு மீண்டும் டெல்லி திரும்பியது.
விமானத்தில் பயணித்த ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மாஸ்கோவில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வர மற்றொரு விமானம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தவறு குறித்த விசாரணைக்கு சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment