Header Ads



மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம் !

-
sivarajah

மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பாதாள உலக கோஷ்டி இரண்டிற்கிடையில் நீண்டகாலம் நிலவும் பகைமையின் விளைவால் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

39 வயதுடைய ரவூப் என்ற படுகாயமடைந்த நபர் , முன்னாள் பிரபல தாதா மாமாஸ்மியின் சகா என பொலிஸார் தெரிவித்தனர்.

மாளிகாவத்தையில் இப்போது பிரவேசித்துள்ள இராணுவம் அங்கு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொழும்பு பெரியாஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்பட்டது.

No comments

Powered by Blogger.