Header Ads



ஜனாதிபதி தலைமையில் போர் வெற்றி - 14,617 இராணுவத்தினருக்கும் பதவி உயர்வு


(ஆர்.யசி)

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் 11 ஆவது போர் வெற்றிதினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் செவ்வாய்கிழமை பாராளுமன்றத்திற்கு முன்னாள் அமைக்கப்பட்டுள்ள தேசிய  இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெறுகின்றது. நாளைய போர் வெற்றி தினத்தில் இராணுவத்தின் 14,617 பேருக்கு பதவி உயர்வுகளும் வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் இன்றுடன் பூர்த்தியாகின்ற நிலையில் இலங்கை பாதுகாப்பு படைகளின் போர் வெற்றி தின நிகழ்வுகள் தேசிய  இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெறுவுள்ளது.

 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் பிரதமர், இராணுவத்தளபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வானது நாளை பிற்பகல் 4 மணிக்கு தேசிய  இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெறும்.

வழமையாக இராணுவ அணிவகுப்புகள், போர் நினைவு நிகழ்வுகள் என விமர்சையாக கொண்டாடப்பட்டாலும் கூட, கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக சமூக ஒன்றுகூடல் குறித்த அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் ஆடம்பரமில்லாது அமைதியான முறையில்  போர் வெற்றி தினம் கொண்டாடப்படும் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றத்திற்கு முன்னாள் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெறவுள்ள நிகழ்விலேயே இந்த பதவி உயர் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இலங்கையில் இராணுவ  வரலாற்றில் இடம்பெற்றுள்ள  பதவி உயர்வு  நிகழ்வுகளில்  ஒரு நாளில் அதிக இராணுவ வீரர்களுக்கு வழங்கும் பதவி உயர்வு இதுவாகும்.

நாட்டின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இராணுவ வீரர்களுக்கு வழங்கும் கௌரவமாக இந்த பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. 

1 comment:

  1. They deserve this, not only for saving our "MAATHRUBOOMIYA" from the ruthless LTTE in 2009 and freeing us from Terrorism, but also for supporting Sri Lankana during natural disasters/distress and now "PULLING OUT SRI LANKA FROM THE CALAMITY OF "COVID19", sacrificing beyound expectation to operate and maintain the many qurantine centers around the country. They have shown their expertise and professionalism in handling the emergency situation created under the coronavirus threat along with the support of the TRI-FORCES personnel and the Health Authorities of Sri Lanka, while maintaining law and order peacefully. They deserve more on the long run. "The Muslim Voice" thanks them profusely and wish them the very best, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.