எந்த வேட்புமனுவையும் நிராகரிக்காமல், ஏற்றுக்கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழு
ஜனாதிபதி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இரண்டு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரையில் இடம்பெற்றது.
Post a Comment