Header Ads



சிறிகொத்தாவை நோக்கி, ஆதரவாளர்கள் படையெடுப்பு - சஜித்தும் வருகை தந்தார்


ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் தற்போது சிறிகொத்தாவில் உள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சிறிகொத்தாவுக்கு விரைந்துள்ளனர்.

அத்துடன் சிறிகொத்தா வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கையும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த செயற்குழு கூட்டத்தின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதியமைச்சர் சஜித் பிரேமசாதவை ஜனாதிபதி வேட்பளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

Powered by Blogger.