பிரதித் தலைவர் பதவியை கேட்ட ரவி, நிராகரித்தார் சஜித்
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கட்சியின் உப தலைவரான ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று -25-சந்திப்பொன்று நடந்துள்ளது.
சஜித் அணியினர் நேற்று முதல் கட்சியில் உள்ள அனைவரிடம் ஆதரவையும் பெறும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு நடவடிக்கையாகவே இந்த சந்திப்பு நடந்துள்ளது.
சஜித் பிரேமதாச வகித்து வரும் பிரதித் தலைவர் பதவியை தனக்கு வழங்கினால், சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த தான் ஆதரவு வழங்க முடியும் என ரவி கருணாநாயக்க இதன்போது கூறியுள்ளார்.
இந்த நிலையில், ரவி கருணாநாயக்க அப்படியான கோரிக்கையை விடுத்ததாகவும் தாம் அதனை நிராகரித்துள்ளதாகவும் சஜித் அணியினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள ரவி கருணாநாயக்க, தான் அப்படியான யோசனையை முன்வைத்தாகவும் அது மிகவும் நியாயமான யோசனை எனவும் இந்த யோசனைக்கு தற்போது பதிலளிக்க முடியாது எனவும் அதற்கு சிறிது காலம் அவசியம் எனவும் சஜித் பிரேமதாச கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment