அரசியல் அனுபவத்தில் பூச்சியமான கோத்தபாய, சர்வாதிகாரியாகவே ஆட்சி நடத்துவார் - ஹரின்
அரசியலில் கோத்தபாய ராஜபக்சவின் அனுபவம் பூச்சியமாகும், ஆனால் அமைச்சர் சஜித் பிரேமதாச 25 வருட கால அரசியல் அனுபவத்தை கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தற்பொழுது களுத்துறை - மத்துகம பகுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கோத்தபாய ராஜபக்ச ஒரு சர்வாதிகாரியாகவே ஆட்சி நடத்துவார். இருந்தாலும் சஜித் மக்களின் மனங்களை அறிந்து ஆட்சி நடத்தக்கூடிய ஒரு தலைவர்.
அதே போல கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக எத்தனை வழக்குகள் காணப்படுகின்றன. இவற்றுள் கொலை வழக்குகளும் உள்ளடங்கும்.
எமது தலைவர் சஜித் பிரேமதாச நாட்டின் மக்களின் நலன் கருதியே ஆட்சியமைக்க முயலுகின்றார். ஆனால் கோத்தபாய ராஜபக்ச தனது குடும்பத்தின் நலனுக்காகவே ஆட்சிக்கு வர முயலுகின்றார். எமது தலைவருக்கு எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்குகள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment