Header Ads



முஸ்லிம்கள் அச்சமின்றி வாழ வேண்டுமா..? கோத்தாபாயவுக்கு ஓட்டுப்போடுங்கள் - எச்சரிக்கும் வீரவன்சா

அச்சமும், சந்தேகமும் இன்றி தமது வர்த்தக நிலையங்களுக்கு சிங்கள மக்கள் வரும் நாடு முஸ்லிம் சமூகத்திற்கு தேவை எனில், முஸ்லிம் சமூகம் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் கடைகளுக்கு அச்சமின்றி பொருட்களை வாங்க சிங்கள மக்கள் வரும் நாட்டை உருவாக்கும் இயலுமை கோத்தபாய ராஜபக்சவுக்கு மாத்திரமே உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் அமெரிக்க இராணுவத்தின் தலையீடுகளை மேற்கொள்வதற்காக இலங்கையில் ஒரு பதற்ற நிலைமையை ஏற்படுத்தும் தேவை அமெரிக்காவுக்கு உள்ளது.

இந்த தேவைக்கு அமையவே சஹ்ரான் ஹசீம்கள் குண்டுகளை வெடிக்க செய்தனர். சிங்கள மக்கள் இதற்கு பதில் தாக்குதலை நடத்தவில்லை என்பதால், அடுத்த தாக்குதலை நடத்த தயாரான பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இதனால், அந்த தாக்குதல் தடுக்கப்பட்டது. மீண்டும் நாட்டில் ஒரு பதற்ற நிலைமையை உருவாக்க இருக்கும் தயார் நிலையை எப்படியாவது தோற்கடித்து, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் பிரிந்து செல்லாது கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற செய்வது மக்களின் பொறுப்பு எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

8 comments:

  1. எல்லாம் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா உடைய அளவில் இன்றும் உள்ளது. எனவே உங்கள் தலைவர் முஸ்லிம்களைக் காப்பாற்ற முடியாது. ஏதாவது ஒரு விபத்து வந்தாள். எனவே ஜனநாயக முறையில் முஸ்லிம்களுக்கு அவர்களின் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கும் உரிமையை கொடுங்கள்.

    ReplyDelete
  2. Muslim, demala Chanda nethiwa sinhala Chanda walin pamanak dinanna puluwan kiyapu wimal weerawansa den tamuseta Muslim Chanda oneunada? Tamuse Saha gammanpila pohottuwe innakam Gotabaya ta dinanna be.

    ReplyDelete
  3. இரவில் விழுந்த படுகுழியில் இந்த நாட்டு முஸ்லிம்கள் பகலில் தெரிந்து கொண்டே விழமாட்டார்கள் என நாம் நம்புகின்றோம். பூருவன்ஸவுக்கு தொங்கும் கயிரோ தாங்கும் குச்சியோ இன்றி அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது இதைத் தவிர சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. பட்டப்பகலில் கோத்தபாயவின் வழிகாட்டலில் முஸ்லிம்கள் வன்மையாகத் தாக்கப்படும்போது, அவர்களின் சொத்துக்களும் பணமும் சூறையாடி அழிக்கப்படும்போது இந்த பூருவன்ஸ எங்கே இருந்தான்.

    ReplyDelete
  4. Now truth is coming out that who has done the attack. It's very clear gotha and vimal team is behind the April attack.

    ReplyDelete
  5. இதுதாண்டா அரசியல்

    ReplyDelete
  6. Who is the hell are you to tell us to wrote Gota? It’s none of your business shut your f..g mouth, we know who to wote.

    ReplyDelete

Powered by Blogger.