இன்னும் சில மணித்தியாலங்களில் ஜனாதிபதி, வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள சஜித்
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.
அமைச்சர் நவீன் திஸாநாயக்க இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்சிக்குள் இருந்த அனைத்து முரண்பாடுகளும் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று -26- அவரை கட்சியின் மத்திய செயற்குழுவில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பார் எனவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

What a good news for mother Srilanka
ReplyDelete