Header Ads



பிரதமராக வரவிருந்த அஷ்ரப் - மக்களிடம் கூறிய லலித் அதுலத்முதலி

89ம் ஆண்டின் பிற்பகுதி என நினைக்கின்றேன்...

அமைச்சர்களான லலித் அதுலத் முதலியும், காமினி திசாநாயக்காவும் ஜனாதிபதி பிரேமதாஸாவுடன் முரண்பட்டுக்கொண்டிருந்த காலம் அது.

மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் அமைச்சர் லலித் அத்துலத் முதலியை சந்திக்க அதிகாலை 05.30 க்கு முன்னர் புறப்பட வேண்டியிருந்தது, முன்னிரவு என்னை தொடர்பு கொண்டு விடையத்தை சொல்லி அதிகாலையில் வர முடியுமா, இருவரும் போவோம் என்று மர்ஹூம் அஷ்ரஃப் வினவினார்.

இன்ஷா அழ்ழாஹ் காலை 05.15 க்கு வீட்டுக்கு வருகிறேன், தயாராயிருங்கள் என்று கூறியவாறே காலையில் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு லலித் அத்துலத் முதலியின் வீட்டை நோக்கி புறப்பட்டோம்.

ஐந்து நிமிடத்தில் லலித்தின் வீடு இருக்கும் வீதிக்குள் நுளைந்து விட்டோம்.
அது அமைச்சர்களின் உத்தியோகபூர்வ வாஸல்தலங்கள் அதிகமாய் இருக்கும் பகுதி.

கிட்டத்தட்ட எல்லா வீடுகளின் தோற்றமும் ஒரே சாயலில் இருந்தன.
ஓரிரு வீடுகள் தாண்டியதும் 'சற்று மெதுவாக போவோம், வீட்டை சரியாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்றும் மர்ஹூம் அஷ்ரஃப் கூறினார்.

வேகத்தை குறைத்து நகர்ந்து கொண்டு செல்லும் போது ஒரு வீட்டை அண்மித்ததும் இதுதான் வீடு என்றதும் அவ்விடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தை வீட்டுக்குள் கொண்டு செல்ல Gate ஐ திறக்க சொல்லிவிட்டு வருகிறேன் என்று வாகனத்திலிருந்து கீழே இறங்கி Gateஐ அண்மித்து Calling bellஐ அழுத்தினேன்.

Gate சற்று திறக்கப்பட்டது. காவலாளியிடம் SLMC Leader அஷ்ரஃப் வந்துள்ளார் என்று கூற அவர் எனது காதுக்கும் கேட்கும் படியே 'சேர் லீடர் அஸ்ரஃப் வந்துள்ளாராம் என்று சிங்களத்தில் கூறினார்.

யாரிடம் இவர் கூறுகிறார் என யோசிக்கு முன்னரே கேட்டை திறந்துவிடு என்று குரல் உள்ளிருந்து கூறியது.

கேற்றை திறந்தவாறே வாகனத்தை உள்ளுக்கு எடுங்கள் என்று காவாலாளி கூறும் போது கண்ட காட்சி ஆச்சரியமாய் இருந்தது.

அந்த அதிகாலையில் சுமார் 25 பேருக்கு குறைவில்லாதோர் மத்தியில் அமைச்சர் லலித் அதுலத் முதலி பொதுமக்கள் சந்திப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

வாகனத்தை நோக்கிச்சென்று உள்ளே அமர்ந்து வாகனத்தை Start செய்துகொண்டே 'அமைச்சர் லலித் முற்றத்தில்தான் நிற்கின்றார்' என்று கூறிக்கொண்டு வாகனத்தை நகர்த்தத்தொடங்கினேன்.

இங்கேயே ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே போவோமே என்று கூறியதற்கு இணங்க வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் இறங்கிச்சென்றோம்.

மர்ஹூம் அஷ்ரஃபை கண்டவுடன் வேகமாய் முன்னோக்கி வந்த அமைச்சர் லலித் கைலாகு கொடுத்து மர்ஹூம் அஷ்ரஃபை அழைத்துச்செல்லும் வழியில் நின்றவர்களிடம் இவரை தெரியும்தானே இவர்தான் SLMC தலைவர் அஷ்ரஃப். முதலாவது சிறுபாண்மை பிரதமராக இலங்கையில் இவர்தான் வருவார் என்று ஓரளவு சப்தமாக கூறிக்கொண்டு நகரும் போது அங்கிருந்தோரில் ஓரிருவர் ஓடிவந்து மர்ஹூம் அஷ்ரஃபுக்கு கைலாகு கொடுத்து சிங்களத்தில் வாழ்த்தும் கூறினர்.

லீடருக்கு கைலாகு கொடுக்க விரும்புவோர் பதினைந்து நிமிடங்கள் பொறுத்திருங்கள் எமது ஷம்பாஷனை முடிந்ததும் இருவரும் வருவோம், என்னை சந்தித்து தமது காரியங்களை முடிக்காதோரும் சற்று பொறுங்கள் என்று கூறியவாறே அமைச்சர் லலித் அதுலத் முதலி மர்ஹூம் அஷ்ரஃபையும் என்னையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

வரவேற்பதற்காக கதவடியில் நின்ற ஸ்ரீமாணி அதுலத் முதலியும் Welcome leader என்று கூறியே மர்ஹூம் அஷ்ரஃபை வரவேற்றார்.

இச்சந்திப்புக்கு ஓரிரு தினங்கள் முன்னரே பிரபல ஊடகவியலாளர் ரிச்சார்ட் டீ சொய்ஸா கொடூரமாக கொலை செய்யப்பட்டிருத்தார்.

தனது வாழ்க்கை வரலாறை எழுவதற்கு மர்ஹூம் அஷ்ரஃபினால் சட்டபூர்வமான Authentic அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருந்தவர் என்ற ரீதியில் மர்ஹூம் அஷ்ரஃபுடனும், உன்னதமான சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் வரமாக பெற்றிருந்த அரசியல் தலைவர் லலித் அத்துலத் முதலியுடனும் ரிச்சார் டீ சொய்ஸா நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

அவரின் மரணம் இருவரையும் எவ்வளவு துயரத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றது என்பதை அவர்களின் 7அல்லது 8 நிமிட உரையாடலில் அறிந்து கொண்டேன்.

தேனீர் பரிமாற வந்த ஸ்ரீமாணியும் உரையாடலில் இணைந்து கொண்டு ஒரு சந்தர்ப்பத்தில் மர்ஹூம் அஷ்ரஃபை நோக்கி கூறினார்
'உங்களின் பெயர் கூறி ரிச்சார்ட் கதைத்ததை நாம் கேட்டதில்லை.
எங்களை சந்தித்த வேளைகளில் சொற்பமேனும் உங்களை ஞாபகமூட்ட தவறமாட்டார்.
ஆனால் எல்லா நேரங்களிலும் Leader என்றே உங்களை சுட்டுவார்.
என் கணவர் கூறுவார் அஷ்ரஃப் எனது மாணவன் மிகப்பெரும் சாதனைகளை செய்வார். பொறுத்திருந்து பாருங்கள் என்பார்.'

'நீங்கள் பேசிக்கொண்டிருங்கள் வெளியில் இருப்போருக்கு தேனீர் ஏற்பாடு செய்யவேண்டும்' என்று கூறியவராக ஸ்ரீமாணி எழுந்து சென்றுவிட்டார்.

பத்து நிமிடம் தாண்டியதும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் ஒருவரின் தனிப்பட்ட விடையமொன்றைப் பற்றி பேசி அதற்கான தீர்வையும் அமைச்சர் லலித் ஊடாக பெற்றுக்கொண்டு சரியாக பதினைந்தாவது நிமிடம் மூவரும் வீட்டிலிருந்து வெளியேறி வாகனத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போது ஏற்கனவே வெளியில் நின்றுகொண்டிருந்தோரில் காத்துக்கொண்டிருந்தோரில் சிலர் மர்ஹூம் அஷ்ரஃபை நெருங்கி கைலாகு கொடுத்து நாயகத்துமா என்று மனதாற அழைத்த காட்சி இன்னும் கண்ணுக்குள்ளே கலங்காமல் தெரிகின்றது.

மக்களின் தேவைகளை பொதுவாகவும் தனிப்பட்ட முறையிலும் நிறைவேற்றுவதற்காகவே காலை 05 மணியிலிருந்து காரியமாற்றிய லலித்தை பற்றி எழுதி முடிக்கலாமா ,  அல்லது அவரின் மாணவன் சிங்கள மக்களாலும் தலைவா என்றழைக்கப்பட்ட மர்ஹூம் அஷ்ரஃபை பற்றி எழுதி முடிக்கலாமா முடியாது.

இப்படித்தான் நினைவுகள் உந்தும் போது உதிர்த்துச்செல்லலாம், இன்றைய தலைமுறை அறிந்து கொள்வதற்கு

லலித்தின் வீட்டிலிருந்து திரும்பி வரும் போது மர்ஹூம் அஷ்ரஃப் கூறுக்கொண்டு வந்த கதைகளை தனி நூலாகவே எழுதலாம்

-வஃபா பாறுக்-

7 comments:

  1. SLMC என்ற இனவாத கட்சியை முற்றுமுழுதாக தனது சுய அரசியல் இலாபத்திற்காக ஆம்பித்து முஸ்லிம்களின் இன்றைய பரிதாப நிலைக்கு வித்திட்டவர்

    ReplyDelete
  2. நல்ல ஒரு ஆக்கம்.அந்த நாட்களில் 1989,எனக்கு சிறு வயது,எனது தந்தை சொன்ன பல கதைகள் அப்போது தலைவர் Ashraf அவர்களை பற்றி.பிற்காலத்திலும் பல கதைகளை எனது தந்தை கூறக் கேட்டிருக்கிறேன்.அப்போது எனது தந்தையின் காணி வழக்குக்கு தலைவர்தான் லோயர்,கல்முனையில் பிற்காலத்தில் (brilliant) டியுட்டரியாக இருந்த இடம்தான் தலைவரின் அப்போதய வீடு எனது தந்தை வழக்கு சம்பந்தமான விடயங்களுக்கு அங்கே செல்லும் போது ஒரு சில தடவை நானும் போனேன்.கட்சி SLMC ஆரம்பிக்கும் போது 25 வது உறுப்பினராக எனது தந்தையை அப்போது தலைவர் இணைத்தும் கொண்டார்.ஆனால் அப்போது எந்த வித பிரயோசனத்தையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக புலிகலின் அச்சுருத்தலுக்கு மத்தியிலும் பாடு பட்ட எத்தனையோ உண்மையான போரலிகல் இப்போது SLMC யில் ஓரம் கட்டப்பட்டுல்லனர்.அப்போது தலைவர் அமைச்சர் ஆன போது கூட எனது தந்தை எந்த வித உதவியையும் பெறவில்லை.மாறாக தனது சொந்த நிதியில் கட்சிக்காக பாடுபட்டார்.எனது தந்தையை போல் ஆயிரக்கணக்கானவர்கள் ஓரம் கட்டப்பட்டன.ஆனால் இப்போது கட்சியில் உள்ள 90% மானோர் எப்போது,எப்படி வந்தார்கள் என்பது இன்னும் ஆச்சரியமாகவே உள்ளது.தலைவர் Ashraf,lalith,பிரேமதாச,காமினி போல தலைவர்கள் இனி எப்போது கிடைப்பார்கலோ அப்போது இந்த நாடு பொருளாதாரத்தில் நல்ல ஒரு நிலைமயில் வளர்ச்சியில் காலடி எடுத்து வைக்கும்.உன்மையில் நல்ல ஒரு ஆக்கம் “பாருக்” அவர்களே.

    ReplyDelete
  3. It is really a wonderful memory of both leaders Ashraf & Lalith and I am having another memory with me is a wrrtten document is an another wonderful history which was the DEBATE between the Ven. Soma thera and the Leader of SLMC. I appreciate his stands on that time by a letter with wishes. He had replied to me with salam, dua & with most ambitious. I am still remember. May Allah reward him the most.

    ReplyDelete
  4. அரசியல் சாணக்கியம் தெரியாத பாலகன் அதனால்தான் ஒரு அமைச்சராக கூட வர முடியாமல் கட்டுரையை எழுதியிருக்கிறார்

    ReplyDelete
  5. He was a great leader and an asset of srilanka Muslims and this nation who are living in our heart forever

    ReplyDelete
  6. Muslim amaicharhal nerathai veenakamal subah thola elumbinal pothum muslimkalai munetruvathatku

    ReplyDelete
  7. is "mannar muslim" from another planet???

    ReplyDelete

Powered by Blogger.