Header Ads



எதிர்வருகின்ற ஜனாதிபதி, தேர்தலை எதிர்வுகூறுவதாயின்...!

2018 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை வைத்து எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலை எதிர்வுகூறுவதாயின், இந்த தேர்தல்தான் இலங்கை வரலாற்றில் சிக்கலான தேர்தலாக அமைய போகிறது. ஏன்எனில், கடந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை நோக்குவோமாயின்,
👉🏿 SLPP - 40%
👉🏿 UNF - 29%
👉🏿 SLFP - 12% (UPFA அடங்கலாக)
👉🏿 JVP - 06%
👉🏿 TNA - 03%
👉🏿 SLMC - 01% (தனித்து)
இதில் JVP இப்போது தனித்து களமிறங்கி இருப்பதால், அதன் வாக்குகளான 06% யை (இப்போது JVP ஒரு எழுச்சி வந்திருக்கின்றது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளாமல்) தவிர்த்து, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பு நடைபெற சாத்தியமிருக்கிறது என்பதை பின்வரும் காரணிகளை அடிப்படையாகக்கொண்டு ஆராய்ந்தால்,
👉🏿 SLPP யின் சிங்கள ஆதரவு தளம்
👉🏿 கோட்டா மீதான கவர்ச்சி
👉🏿 UNP யின் வேட்பாராக சஜீத்
👉🏿 UNP யின் சிறுபான்மை ஆதரவு தளம்
👉🏿 SLFP யின் இருப்பும் ஒன்றிணைவும்
ஒரு பெரிய அரசியல் சகதிக்குள் இலங்கை மாட்டப்போவதை இலகுவாக அறியலாம்.
தேர்தல் முடிவுகள் எப்படி அமையலாம்?
APPLICATION - 01
UNP யின் வேட்பாளர் சஜீத் எனின் - அவர் தனிப்பட்டரீதியில் கறைபடியாத கரம் என்பதாலும் - அவர் மீது கோட்டா மீது முன்வைக்கப்படும் கொலை, வெள்ளை வேன், ஆட்கடத்தல் போன்ற பாரிய குற்றச்சாட்டுக்கள் இல்லாததாலும் - SLPP யின் சிங்கள வாக்குகளை கூறு போட சந்தர்ப்பம் இருக்கிறது. அதற்காக எடுகோளை பாரியளவில் எடுக்காமல் வெறும் 10% யை உடைப்பார் என எடுத்துக்கொண்டால்,
👉🏿 UNP க்கு [29 + 10 + 01 + 03] = 43% வாக்குகள் கிடைக்கும்
(அதாவது UNP யின் 29%, SLPP யிலிருந்து உடைக்கப்பட்ட 10%, SLMC யின் 01% மற்றும் TNA யின் 03% எனச் சேர்த்து 43%)
👉🏿 இவை போக SLPP க்கு எஞ்சுவது 30% [40-10= 30] மாத்திரமே
👉🏿 SLFP யாரோடும் சேராத நிலையிலேயே இது
APPLICATION - 02
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் SLFP சஜீத்திற்கு (UNP க்கல்ல சஜீத்திற்கு) ஆதரவு வழங்கினால் மட்டும் SLFP உடைவதை தடுக்கலாம். கோட்டாவிற்கு ஆதரவு வழங்கினால், சந்திரிகாவின் பிடியில் இருக்கும் துமிந்த திசநாயக போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜீத்தை ஆதரிக்கும் முடிவை எடுப்பார்கள். எனவே SLFP சஜீத்திற்கு ஆதரவு வழங்கினால்,
👉🏿 UNP க்கு [43 +12 ] = 55 %
(அதாவது APPLICATION - 01 யில் பெறப்பட்ட UNP யின் 43% வாக்குகளுடன் SLFP யின் 12% வாக்குகளையும் சேர்த்து 55%)
👉🏿 SLPP யின் வாக்குகளில் மாற்றமில்லை. 30% மாத்திரமே
APPLICATION - 03
ஜனாதிபதி அதாவது SLFP கோட்டாவிற்கு ஆதரவு வழங்கினால் (எந்த உடைவையும் SLFP சந்திக்கவில்லை என்ற எடுகோளில்),
👉🏿 SLPP க்கு [30% + 12] = 42% 
👉🏿 UNP க்கு [29 + 10 + 01 + 03] = 43% வாக்குகள் கிடைக்கும்
(அதாவது UNP யின் 29%, SLPP யிலிருந்து உடைக்கப்பட்ட 10%, SLMC யின் 01% மற்றும் TNA யின் 03% எனச் சேர்த்து 43%)
APPLICATION - 04
SLFP இரண்டாக உடைந்து இரு பக்கமும் பிரிந்தால்
👉🏿 SLPP க்கு [30% + 06] = 36% 
👉🏿 UNP க்கு [43 +06 ] = 49%
ஆக மொத்தத்தில் இந்த 04 விதமான APPLICATION களில் ஒரே ஒரு முறையில் மாத்திரமே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஒருவர் 50+ வீத வாக்குகளை பெற முடியும். மீதி 03 யிலும் கஷ்டமென்ற விடயமே இருப்பதால். நிகழ்தகவு 4:3 என்ற வகையில், அதிகமாக எந்த வேட்பாளரும் 50+ வாக்குகள் எடுக்கும் சந்தர்ப்பம் குறைவாகவே உள்ளது.
எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை ஒரு பெரிய சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ள போகிறது என்பதுதான் உண்மை. எனவே வாக்களிப்பில் 2 ஆம் 3 ஆம் தேர்வு வாக்குகளின் தேவை அதிகம் இந்த முறையே உணரப்படுகிறது.
இது எடுகோள் மாத்திரமே. விளங்காதவர்கள் தள்ளி நிற்கவும்.
NOTE:-
இதற்கு பின்னர் ஏற்படக்கூடிய காரணங்களான
👉🏿 JVP ஆதரவில் அதிகரிப்பு
👉🏿 கூட்டிணைவுகள்
👉🏿 சஜீத் வேட்பாளர் இல்லாமல் போதல்
👉🏿 கட்சிகளின் உடைவு
👉🏿 கூட்டணியில் பிளவு
👉🏿 சதி முயற்சிகள்
👉🏿 யுக்தியான பிரச்சாரங்கள் 
போன்றவை இம்முடிவுகளில் மாற்றங்களைத் தரலாம். அதுமட்டுமல்லாமல் இன்னும் நீண்டகாலமும் இருப்பதால் இந்நிலைமைகள் மாறவும் சந்தர்ப்பங்களுண்டு.

ஏ.எல். தவம்

3 comments:

  1. பொய்க்கும் வம்புக்கு இழுப்பதற்கும் ஓர் அளவே இல்லையா?
    யூ.என்.பி.யை உச்சத்தில் வைத்துக்கொண்டாடுவதற்கு உங்களுக்கு இன்னும் வெட்கமில்லையா? நல்லாட்சி என்று வந்தவர்கள் செய்த அநியாயங்கள் போதாதா?
    மொட்டுக் கட்சி வென்றால் என்ன? தோற்றால் என்ன? உங்கள் தரப்படுத்தலில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். வெறுமனே, ஓரிரு மாத்திற்குள் வந்த ஒரு கட்சி உள்ளூராட்சித் தோ்தலில் எப்படி வென்றது? அது போகட்டும்! உங்களுக்கு அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை இல்லையா? ஆட்சியைத் அமைப்பவனும் ஆட்சியைப் பறிப்பவனும் அவனல்லவா? வீணாக மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்கி வம்பினை விலைக்கு வாங்கப் போகின்றீர்களா?
    உங்களது இந்த தரப்படுத்தலைக் குப்பைக்குள் போட்டு விடுங்கள்! ஒரு பக்கச் சார்பானது. நான் எந்தக் கட்சிக்கும் வக்காலத்து வாங்குபனல்லன். எல்லாக் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்!

    ReplyDelete
  2. Writer is a UNP supporter and wishful thinking. Any votes received at last local polls for Slip will remain same. Also there vote base will increase from the easter Sunday attacks. Kindly consider all facts before doing any analysis.

    ReplyDelete
  3. Writer is a UNP supporter and wishful thinking. Any votes received at last local polls for Slip will remain same. Also there vote base will increase from the easter Sunday attacks. Kindly consider all facts before doing any analysis.

    ReplyDelete

Powered by Blogger.