முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்திற்காக போராடும் பெண்களே,, இது சமூகத் துரோகமாக இல்லையா..?
ஹஃப்ஸா ளரீஃப்
(தென் கிழக்குப் பல்கலைக் கழகம்)
முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட குழு இரண்டாகப் பிளவுபட்டுத் தத்தமது இரு வௌ;வேறு அறிக்கைகளை 2018 இல் அரசிடம் ஒப்படைத்தனர் என்பது பற்றி மீண்டும் தெளிவு படுத்த வேண்டிய தேவை இருக்காது என்று கருதுகின்றேன்.
எனினும், நீதியரசர் சலீம் மர்சூப் அவர்களது அறிக்கையை மாத்திரம் அரசிடம் சமர்ப்பித்து சிபாரிசு செய்ய முஸ்லிம் அமைச்சர்களாலும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் ஆராயப்பட்டு, அவர்களது பிரேரணைகளுடன் நீதி அமைச்சிடம் ஒப்படைக்க இருந்த Nவைளையில், அதனைச் சற்று தாமதித்தாவது முழுமையான பரிசீலனையுடன் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவான போது, முன்னாள் அமைச்சர் பவுஸி அவர்களது இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் ஒரு மீளாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
சட்டத்தரணி சபானா குல் போன்றவர்களுக்கு அக்குழுவில்; ஓர் ஆலிம் அதில் அங்கம் வகிப்பதுதான் அநியாயமாகத் தெரிகிறது. ஆனால் அவர் சார்ந்த குழுவினரின் தன்னிச்சையான அறிக்கை மாத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது நியாயமானதாகத் தெரிகிறது.
இவர்களது வாதத்தின் பிரகாரம் இக்குழுவில் ஓர் ஆலிம் மதத்தலைவர் தெரிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது என்பதாகும். இவ்விவகாரம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் போதுமானவர்கள் என்பது உண்மையில் மிகப் பிழையான ஒரு வாதமாகும். ஷரீஅத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு விவகாரம் ஷரீஅத்தில் துறைசார்ந்தோர் இருக்கக் கூடாது என்பது ஏன் என்பது புரியவில்லை. சமயத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தை சமயம் கற்காத ஒரு சாராரின் மூலம் மாத்திரம் நிறைவு செய்ய முடியும் என்பது நீங்கள் ஏதோ வெளிநாட்டுச் சக்க்திக்கும் நிகழ்ச்சி நிரலுக்கும் செயற்படுவதாகத் தோன்றுகின்றது.
பக்கச்சார்பாக ஒரு தரப்பினரின் அறிக்கை மாத்திரம்; சமர்ப்பிக்கப்படவிருந்த தறுனத்தில் அதனை மீளாய்வு செய்ய ஒரு மீளாய்வுக் குழு தெரிவுசெய்யப்பட்டதும் குறிப்பாக அதில் முஃப்தி ரிஸ்வி அவர்கள் உள்வாங்கப்பட்டிருப்பதும், 9 வருடங்கள் களத்தில் பணியாற்றிய சட்டத்தரணியை; சற்று நிலைகுலைய வைத்ததாக சுட்டிக் காட்டும் அதே வேளை, ஒரு பக்கத்து அறிக்கை மாத்திரம் அமைச்சர்களினால் நீதி அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கான இறுதித் தறுவாயில் இருக்கிறது என்ற செய்தி கேட்டு, உங்களை விடவும் பல ஆண்டுகள் தஃவா மற்றும் சமய சமூகப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அடுத்த தரப்பினரை நிலைகுலைய வைத்திருக்காதா? இது தானா உங்களது சட்டத்துறையின் நியதி?
முஸ்லிம் அமைச்சர்களினாலும் பாராளுமன்ற அங்கத்துவர்களாலும் வழங்கிய அங்கீகாரத்தை மீளாய்வு செய்வதற்கு ஒரு குழு தேவை என்பது இப்போது சட்டத்தரணி அவர்களுக்குப் புரிந்திருக்கலாம்.
பாராளுமன்ற அங்கத்துவரோ அமைச்சரோ அல்லாத ஒருவர் ஏன் இக்குழுவில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை மடக்கி மடக்கி வினவும் சட்டத்தரணியிடம்; ஒரு விடயத்தை வினவும் உரிமை முஸ்லிம் சமூகத்துக்கு இருக்கிறது,
அதாவது, திருத்தக் குழுவில் மொத்தம் 17 அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அத்தோடு, அவர்களுக்கென்று நிர்வாகச் செயலாளர் ஒருவருவரும் நியமிக்கப்பட்டிருந்தார். அதில் 9 அங்கத்துவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களது அறிக்கையை அங்கீகரித்து (அவர்களுள் கலாநிதி ஷ{க்ரி, அஷ; iஷக் முபாறக் (மதனீ) அஷ; iஷக் ரிஸ்வி முஃப்தீ அடங்களாக) ஒப்பமிட்டு சமர்ப்பித்தனர்.
நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான அறிக்கையை 8 அங்கத்துவர்கள் மாத்திரம் (அவர்களில் எவரும் சன்மார்க்க அறிஞர்கள் கிடையாது என்ற நிலையில்) அங்கீகரித்துள்ளனர். இந்நிலையில் , நிர்வாகப் பணிக்காக அமர்த்தப்பட்டவர் அவர் இவ்வங்கத்துவர்களில் எவ்வகையிலும் அடங்காத இணைக்க முடியாத ஒருவரான திருமதி. டீல்ஹார அமரசிங்க அவர்களை எவ்வகையில் உள்ளடக்கி அவரது ஒப்பத்துடன் நீதி அமைச்சிடம் சமர்ப்பித்தார்கள்? இது சமூகத் துரோகமாக இல்லை? ஆவர்களது எண்ணிக்கையை சமப்படுத்தும் ஒரு கீழ்த்தரமான ஒரு செயற்பாடாக இது இல்லையா? இதுவெல்லாம் நியாயம் ஆனால் ஒரு மார்க்க அறிஞர் ஒருவர் குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளமை கேள்விப்பட்டதும் தலைசுற்றுகிறதா? அநியாயமாகத் தெரிகிறதா?.
அத்துடன், நீதியும் நியாயமுமான ஒரு பிரேரணை சமர்ப்பிக்கப்படுவதற்கான நம்பிக்கைச் சாத்தியம் எந்தளவுக்கு உள்ளது? ஏன்ற சந்தேகத்தைக் கிளப்பி தமது அறிக்கை மாத்திரமே நீதியானதும் நியாயமானதுமாகும். அடுத்த தரப்பினர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள், குறிப்பாக சன்மார்க்க அறிஞர்கள் இருந்தும் அவர்களது அறிக்கை அநியாயமானதும் அநீதியானதும் என்ற தோற்றப்பாட்டையே சமூகத்திற்குச் சொல்ல வருகிறார்கள் மாதர் குலத்தவர்கள்.
அது மாத்திரமின்றி, ஒரு நாட்டின் சட்டமானது மதக்கோட்பாடுகளுக்கு இடமளிக்கும் அதே வேளை, அந்நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் மாறுபடாத வகையில் அமைய வேண்டும் என்ற ஒரு பிழையான வாதத்தையும் முன் வைத்துள்ளார் சட்டத்தரணி.
ஆப்படியாயின் நீண்ட நெடுங்காலமாக இனவாதிகளான பொது பல சேனா போன்ற அமைப்புக்களும் இனவாதிகளும் இதனைத்தானே கோரிவருகின்றனர். அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கும் இவர்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் அரசியலமைப்புக்கும் மாறுபடாத வகையில் இருக்குமாயின் அதற்கு எப்படி தனியார் சட்டம் என்று அழைக்கலாம்? அப்படியான ஒரு சட்டம் இருப்பதன் அர்த்தம் என்னவோ? முஸ்லிம்கள் என்பவர்கள் ஒரு ஷரீஆ கொடுக்கப்பட்டவர்கள், மற்றவர்கள் ஒரு ஷரீஆ இல்லாதவர்கள் அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களது சட்டத்துக்கு மாறுபடாத ஒரு சட்டம் சாத்தியப்படுமா? என்பதை சட்டத்துறை கற்றவர்கள்தான் சொல்ல வேண்டும்.
இறுதியாக, 'இலங்கையின் காதி நீதிமன்ற முறைமையும் முஸ்லிம் பெண்கள் மீதான அதன் தாக்கமும்' என்ற நூலை மேற்படி சட்டத்தரணியின் அணியைச் சார்ந்த நீதியரசர் சலீம் மர்சூப் எழுதியுள்ளார். இதனை அவர்களது அமைப்பான, முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி வெளியிட்டுள்ளது. ஆனால் இதனை வெளியீடு செய்ய நிதியுதவி வழங்கியுள்ள நெதர்லாந்தைச் சேர்ந்த ர்ஐஏழுளு என்ற அமைப்புக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதுவே எமது மற்றுமொரு ஐயமாகும். இவ்வமைப்புப்பற்றிய தகவல்களை மக்கள் இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம். இது தெநர்லாந்தைச் சார்ந்த அமைப்பாகும்.
இஸ்லாத்தில் பெண்களின் சுதந்திரம் பற்றி சட்டத்தரணிகள் ஆலிம்களுக்கு சொல்ல வேண்டிய தேவைகள் இருக்காது. ஆவர்கள் தான் பெண்களின் ஒழுக்கம், கல்வி மற்றும் சமயம் சார்ந்த விவகாரங்களை எமக்குப் போதிப்பவர்கள்.
சட்டத்தரணியின் இறுதியான குற்றச்சாட்டு, குறிப்பிட்ட சிலரின் சுய இலாபங்களுக்காக தவறாகப் பொருள் கோடல் செய்யப்பட்டு, அடிப்படைவாதக் கோட்பாடுகளாகவும், தீவிரப் போக்கான கொள்கைகளாகவும் மாறக் கூடாது என்கின்றார்.
நாமும் மடக்கி மடக்கி அதனையே எதிர்பார்க்கின்றோம் என்று சொல்லிக் கொள்கின்றோம். 20 இலட்சம் மக்களின் அபிலாசைகளை குறிப்பிட்ட சில பெண்களின் சுய இலாபங்களுக்காக அவர்களது மனோஇச்சையின் பால் முழு பெண்கள் சமூகத்தையும் தள்ளிவிட வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் பயந்து, இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அடிப்படைவாதிகளாகவும், தீவிரப்போக்காளர்களாகவும் ஏனைய சமூகத்தவர்களுக்கு காண்பிக்க முற்பட வேண்டாம்.
இஸ்லாமிய ஷரீஆவின் சட்டங்கள் தெளிவானவை. அதனை ஸலஃபுகளின் வழிநின்று பெற்றுக் கொண்டால், அது அடிப்படைவாதமாகவோ, தீவிரவாதமாகவே தெரியாது. அவ்வாறு புரிந்து கொண்டால் மாத்திரமே, இரு பாலாரின் அடிப்படைச் சுதந்திரம், உரிமை, கௌரவம், கண்ணியம், என்பன ஒரு போதும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்காது என்பதை உரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

great
ReplyDeletewell said
நாட்டில் Muslim களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன.எனவே “சபானா குல்” குழுவினர் இன்னும் இன்னும் தேவையற்ற விடயங்கலை பேசுவது மடைமைத்தனமானது.இதனால் இனவாதிகலுக்கு இன்னும் வாய்ப்புக்களை,சந்தர்ப்பங்களை உருவாக்கவும் Muslim களுக்கு எதிரான செயற்பாடுகளை விரிவுபடுத்தவும் வாய்ப்பளிக்கும்.
ReplyDeleteVery correct.Some people are self proclaimed pandits and they are yet to learn the lessons by looking developed countries the extent of damage done by trespassing laws of the creator.
ReplyDeleteசபாஷ் Hafsa Lareef: இவ்வளவு காலமும் முஸ்லிம் பெண்களில் தகுதி வாய்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் இல்லையென்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். கிழித்து எறிந்துவிட்டீர்கள் போங்கள். சிறப்பான ஆதாரங்களுடன் நெஞ்ஞை நிமிர்த்தி தங்களது கருத்துக்களை எளிய முறையில் சின்ன பையன்களுக்கும் விளங்கத்தக்கவகையில் புடமிட்டுள்ளீர்கள். இது (எல்லா இஸ்லாமிய) சம்பந்தமான தங்களது எதிர்கால ஆக்கங்கள் மேலும் வாசகர்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக இருக்கும்.
ReplyDeleteஇங்கு பேசப்பட வேண்டியது இஸ்லாமிய சட்டங்கள் அல்ல அதில் யாரும் கை வைக்க முடியாது, அவ்வாறு யாராவது கை வைக்க முனைவார்களேயானால் அதற்காக தங்களின் உயிரையும் கொடுக்க இலங்கை நாட்டின் 22 இலட்சம் முஸ்லீம்களும் தயாராக உள்ளார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ReplyDeleteஅதே நேரம் காதி நீதிமன்றங்களில் பெண்களுக்கு அநீதி விளைவிக்கப்படுகின்றது என்ற விடயத்தை மறுக்கவும் முடியாது. எனவே இதை யாரின் மூலம் சீர் படுத்த முடியும் என்று ஆராய முற்பட்டால், நாட்டின் உலமா சபையோடு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் சட்டத்துறை வல்லுனர்கள், முஸ்லிம் கல்விமான்கள் என எல்லோரும் ஒன்று கூடியே சீர் செய்ய வேண்டும். காரணம் இது நாட்டின் சட்டத்தில் உள்ளடக்கப்படக்கூடிய ஒரு நாட்டின் சட்டமாகும். இது எமக்கு மட்டுமல்ல எமது எதிர்கால சந்ததிகளுக்கும் உரித்துடைய சட்டமாக அமையப் போகின்றது.
அத்தோடு, திருமண வயதெல்லை 18 என்ற விடயத்தில் ஒரு குறிப்பிட்ட வயதெல்லையை நிர்ணயம் செய்யுமிடத்து அதில் இஸ்லாமிய மார்க்கத்தில் உடன் பாடில்லை என்ற விடயத்தை ஒரு சாதாரண மனிதனாலும் புரிந்து கொள்ள முடியும்.
உதாரணமாக, ஒரு மனிதர் தன் மரணத்தருவாயில் இருக்கும் நிலையில் தனது 15 வயது மகளை அவர் நல்லவர் என நினைக்கும் ஒருத்தருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினால் அது நாட்டின் சட்டத்தின் காரணமாக முடியாமல் போய்விடும் என்ற ஒரு சிறிய உதாரணம் மூலம் புரிய வைக்க விரும்புகின்றேன். (தொடரும்)
INDA AMMAAKAL ELLAAM, SHANMAARKA
ReplyDeleteARIVULLA, AIVELAI THOLUPWARHALAA.
KATCHI MAARUMUN, SHARIA SHHATTAM,
THIRUTHA TEHEIWAI ILLAI, ENRU SHONNA
FOUZI,
YAANAI KATCHIKKU, MAARIAUDAN
SHATTA THIRUTHAM THEIVAI ENGIRAR.
FOUZI AWARHALAY, IZUVAA UNGALUDAYA
ISLAM
PAZIL THARAUM.
Masha allah...good reply
ReplyDeleteLadies with Western mindset are on work for safeguarding our Muslim women. MMDA needs changes and the regulation on implementing the MMDA should also be introduced. Our women shouldn't suffer due to the loopholes in the MMDA. ACJU should carry out an islandwide survey on Muslim womens' marriage and divorce.
ReplyDeleteசகோதரி ஹப்சா ளரிப் அவர்களுக்கு மிக்க நன்றி உண்மையை எடுத்துக் கூறியிருக்கிறீர்கள். சகோதரி சபானா குல் நிச்சயம் அவருடைய professional நிலையில் இருந்து கொண்டு MMD சம்பந்தமாக கருத்துக்களை வெளியிடுவது பொருத்தமல்ல. ஒரு சாதாரண இஸ்லாமிய பெண்ணாக இருந்து நோக்கினால் அவருக்கு மட்டுமல்ல அவரைப் போல் வெளிக் கிளம்பி இருக்கும் பெண்ணியல் மன நோயாளிகளுக்கும் இலகுவாக புரியும்.
ReplyDeleteA open request to all readers, if anyone knows kindly publish the details and contact numbers of ladies group who are in front of mic and taking about MMD. Because public we have some doubts and questions to ask with them to clear.
Also that specif NGO name is not visible please review if any one knows.
"THE MUSLIM VOICE FULLY ENDORSES THAT THERE IS A NEED FOR CHANGE MAN MADE SECTIONS "MUSLIM MARRIAGE AND DIVORCE ACT (MMDA)". “The Muslim Voice” is happy that the Muslims and Muslim politicians are thinking “PROACTIVELY”. “The Muslim Voice” is only trying to kindle the “aspirations and ispirations” of the Muslim community concerning this ACJU and Rizvi Mufthi in order to bring about a change and create a new “honest and dignified culture” within in the Sri Lanka Muslim Community. Not only the changes in the MMDA that meets the consensus of the general Muslim community in Sri Lanka, within the religion of Islam, "CHANGES" in the ACJU is also an URGENT need today, and the ACJU has to be asked to keep away from "POLITICS". THE ACJU MINGLING IN DIRTY POLITICS, IS FORCING ADVICE ON PM RANIL WICKREMESINGHE THESE DAYS TO WITHDRAW THE MMDA AMENDED LAWS WHICH HAD BEEN BROUGHT TO AN ACCEPTABLE "CLOSE" BY THE CONCERNED MUSLIMS AND LEGAL EXPETRTS ON SHARIAH LAW. The ACJU has to "STOP" this nonsense once and for all. Let the ACJU put it's house in oeder from now, Insha Allah.
ReplyDeleteThe ACJU received a large block of land in Colombo 12 from former President Mahinda Rajapaksa when they were politically flirting with the UPFA/SLFP government and no one knows what happened to this block of state land that the ACJU got from Mahinda. MAHINDA RAJAPAKSA SHOULD KNOW WHAT HAPPENED TO THIS BLOCK OF LAND, WHETHER IT WAS SOLD OR NOT OR WHAT HAPPENED TO THE MONEY IF IT WAS SOLD?
The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has “DEFAULTED” nearly 2 million Muslims in Sri Lanka, especially with regards to the pig oil presence certification of the imported and distributed/marketed milk powder in Sri Lanka. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has commited the “BIGGEST CRIME” under “ISLAMIC FAITH/BELIEF” of committing the Muslims using these Milk powder to “HARAM” a religious crime that cannot be pardoned, except with the mercy of God AllMighty Allah. PLEASE KINDLY NOTE THAT THE ADVICE GIVEN BY THE ACJU/RIZVI MUFTHI TO THE MUSLIM MINISTERS, DEPUTY MINISTERS AND STATE MINISTERS HAS PLUNGED OUR COMMUNITY INTO GREAT POLITICAL AND COMMUNITY DISASTER. THE ACJU IS NOW TRYING TO FORCE ADVICE ON RANIL WICKREMESINGHE ON THE STALL THE CHANGES THAT HAS BEEN AMICABALLY
The Muslims in Sri Lanka should ask for a Presidential Commission to probe the activities of the ACJU, The ACJU Halal Accreditation Council (Guarantee) Limited and the wealth amazed by the leadership of the ACJU. IF THIS WILL NOT HAPPEN NOW, AT LEAST ONE MEMBER OF THE MUSLIM COMMUNITY IN SRI LANKA WILL MOVE BY THE GRACE OF GOD ALLMIGHTY ALLAH IN THIS MATTER ACCORDING TO THE LAW OF THE COUNTRY WHEN THE TIME COMES, Insha Allah.
Noor Nizam – Convener “The Muslim Voice”.
உலக அறிவில்லாமல் நடந்துகொள்ளும் பிக்குகளாலும் ஆலிம்களாலும் ஒரே வகையான பிரச்சினையே ஏற்படும். 9 வருடங்களாக ஒரு தீர்வுக்கு வரமுடியாதவர்களை ஓரமாக்கி வைத்துவிட்டு தீர்வு பெறுவதே சரியானது. முஸ்லீங்கள், இதுதான் இஸ்லாம் என ஒருவர் சொல்வதை ஏற்றுக் கொண்டால் மாற்றுக்கருத்துக் கூற அச்சப்படுவார்கள் எனும் பலவீனத்தை பலமாகவைத்துக்கொண்ட பலர் ஒவ்வொரு மார்க்கத்தைக் கூறி மக்களை அடிமையாக்கி வைத்துள்ளனர். தவறு செய்கிறார் என்று நன்றாகத் தெரிந்த பின்பும் பெளத்தர்கள் பிக்குகளை ஒதுக்கி வைக்கமாட்டார்கள். ஒவ்வொரு மனிதனும் மதத்தால் அவ்வாறு பின்னப்பட்டிருக்கின்றான். ஒரு முஸ்லிம் நாட்டில் வாழ்கின்ற எண்ணத்தைக் கைவிட்டு பல்லின சமூகக்கட்டமைபில் வேறு ஒரு சமூகம் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் இருக்கின்றோம் என்ற உணர்வு எமக்கு ஏற்படவில்லை என்றால் இலங்கையில் முஸ்லிம்களின் இருப்பு ஆபத்தனாக முடியும். சுமக்க முடியாத பாரத்தைச் சுமந்து கொண்டிருக்கும் அமைப்பின் மார்க்கவாதிகள் ஆயிஷா நாயகி அவர்களால் வழிநடாத்தப்பட்ட யுத்தத்தை எக்கண்கொண்டு பார்க்கின்றார்களோ தெரியாது.
ReplyDeleteWe must declare Sabana Gul as aa Agent of Western Countries, Enemy of Muslim & Imprisonment of SL Government, In addition we must declare death penalty to her.....
ReplyDelete