Header Ads



பெருமானாரின் கூற்றா, தன் சொந்ந கருத்தை வாபஸ் வாங்கிய ஐரோப்பிய பெண்மணி

ஐரோப்பிய நாடு ஒன்றில்  இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கான  இஸ்லாமிய அடிப்படை கற்கை நெறிக்கான வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, ஜனாஸாவுடைய பாடம் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தது, 

அதன்போது பாடத்தை நடாத்திக் கொண்டிருந்த உஸ்தாத் ஜனாஸாவை அடக்கும் இடத்திற்கு பெண்கள் தொடர்ந்து செல்வது கூடாது என்ற கருத்தை முன்வைத்தார்.

இதைக்கேட்டு பின்னால் இருந்த புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒரு பெண்மணி ,
என்ன காரணத்திற்காக செல்லக் கூடாது என கேள்வி எழுப்பினாள்.   
                              
சிறிது நேரம் யோசனைக்கு பின் புதியமுஸ்லீம் என்பதால் உஸ்தாத் அப்பெண்ணுக்கு அறிவியல் ரீதிதாக பதிலலிக்க முயற்சித்தார்.

பெண்கள் பொதுவாக பயந்த சுபாவம் உடையவர்கள்,மேலும்
மன ரீதியாகவும் பலவீனமானவர்கள் அவர்களால் குறித்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் போய்விடும் என்றெல்லாம் தனக்கு முடியுமான தர்க்க ரீதியான கருத்துக்களால் விளங்கப்படுத்த முயற்சித்தார்.

இதை செவிமடுத்த அந்த பெண்மணி,
உஸ்தாதை நோக்கி மன்னிக்கவும் உஸ்தாத் நாம் மேற்கத்தைய சூழலில் வளர்ந்த பெண்கள் எம் பெண்கள் மன ரீதியாகவும் பலமானவர்கள் இரவு நேரங்களில் கூட ஜனாசாக்களை அடக்கும் போது சென்றாலும் எமக்கு அச்சம் உண்டாகாது போன்ற கருத்தில் அந்த பெண்மணி தன் நிலைப்பாட்டை கூறி உங்களின் கருத்து ஏற்கக் கூடியாதாக இல்லையே என பதிலளிக்க முட்பட்டாள்.

இதனைக்கேட்டு சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்த உஸ்தாத்,
இறுதியாக அந்ந பெண்ணை நோக்கி,
மன்னிக்கவும் என் அறிவுக்குற்பட்டதை வைத்து புரிய வைக்க நினைத்தேன்.
அதற்குறிய தகுந்த காரணத்தை
என்னால் விளங்கப்படுத்த முடியாது ஆனால் ஒன்றை கூறுகிறேன்.
இந்த கூற்று என்னுடையதல்ல,இது ஈருலக வெற்றிக்கான வழிகாட்டியாக இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் அவர்களால் கூறப்பட்டது என்று கூறி குறித்த ஹதீஸை முன்மொழிந்தார்கள்.
இதைக் கேட்டதுதான் தாமதம்,
உடனே புதிதாக இஸ்லாத்தை ஏற்ற அந்த பெண்மணி எழுந்து நின்று என்னை மன்னித்து விடுங்கள் இது இறைத்தூதரின் கூற்றா!  அதை தெரியாமல் ஏதேதோ பதிலலிக்க முனைந்து விட்டேன்.எம் அறிவியலால் விளங்கப்படுத்த முடியாவிட்டாலும்
நிச்சயமாக இக்கூற்று 100/: மனிதசமூகத்தின் நலவுக்காக கூறப்பட்டதாகவே இருக்கும்.
அஸ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஅஸ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று கூறி உட்கார்ந்தால் அந்த பெண்மணி.

இந்த சம்பவத்தை இங்கு பகிர்வதன் காரணம்,
இன்று மேற்கத்தேய மோகத்தால் பெண்களின் உரிமை என்ற போலி கோசத்தோடு மார்க்கத்தை விற்கவும், மார்கத்தை புறக்கணிக்கவும் எத்தணிக்கும் எம் இஸ்லாமிய பெண்மணிகள் குர்ஆன் சுன்னாவின் மீது பற்றுள்ளவர்களாக, ஷரீயாவின் கட்டளைப்படி தம் வாழ்வை மாற்றாத வரைக்கும் தன்னை அழிவில் இருந்து யாராலும் காப்பாற்ற முடியாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

நினைத்த படி காலத்திற்கேற்ப மாற்றங்களை உண்டாக்க இஸ்லாமிய சட்டதிட்டங்கள் மனிதனால் புனையப்பட்டதல்ல, இறைவன் வகுத்த சட்டம்,
நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் எந்தளவுக்கு ஷரீயாவுக்கு நெருக்கமாக மாற்ற முயற்சிக்க வேண்டுமே தவிர ஷரீயாவை விட்டும் தூரமாக்க முயற்சிப்பது அல்லாஹ்வின் தண்டைனைனை இழுத்து வரக்கூடியது என்பதை நினைவில் கொள்வோம்.
இறைவன் வகுத்த சட்டம் நிச்சயமாக மனித குலத்திற்கு எதிரானது அல்ல,
யாருக்கும் அநீதியானதல்ல என்பதை புரிந்து கொள்வோம்.

அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை எம் அறிவியல் சிந்தனையால் மாற்ற நினைப்பது எமக்கு வழங்கப்பட்ட மருந்துக்கு பதிலாக நஞ்ஞை சாபிடுவது போன்றதே!

குர்ஆன் சுன்னாவின் நிழலில் எம் வாழ்க்கை நிலைத்திருக்கும் வரை வெற்றியின் பாதையில் நிலைத்திருப்போம்.

No comments

Powered by Blogger.