Header Ads



உலமாக்கல் பல்துறையாளர்களாக உருவாகுவது, காலத்தின் தேவையாகும் - SM முஹம்மது றியாஸ்


- இர்ஷாத் றஹ்மத்துல்லா -

அரபுக் கல்லுாரிகளில் கற்று மௌலவிகளாக வெளிவருபவர்கள் சட்டத்தரணிகளாகவும்,பொறியியலாளர்களாகவும்,வைத்தியர்களாகவும் வருவதற்கான கல்வியினையும் கற்பது காலத்தின் தேவையாகவுள்ளது என இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும்,நுகர்வோர் கூட்டுறவு சம்மேளனத்தின்  பணிப்பாளருமான எம்.எஸ்.முஹம்மத் றியாஸ் தெரிவித்துள்ளார்.

புத்தளம் முஹாஜிரீன் அரபு கல்லுாரியின் அதிபர் அஷ்ஷெய்க் முபாரக் (றசாதி) தலைமையிலான மாணவர்கள் கொழும்பில் அமைந்துள்ள அலுவலகத்தில் கூட்டுறவு சங்கத்தின்  தலைவரை சந்தித்த போது,அவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே  மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் கருத்துரைக்கையில் –

மத்ஸாக்களில் கல்வியினை கற்றதன் பின்னர் பரீட்சைக்கு தோற்றியதுடன் அதனது பெறுபேறுகள் வந்துவிட்டதுடன்,உலமாக்களாக மட்டும் இருப்பதைவிடுத்து சமூகத்திற்கு தேவையாகவுள்ள துறைகளுக்கான கற“றலை மேற்கொள்ள வேண்டும்.உலமாக்கள் மேற் கூறப்பட்ட துறைகளில் காணப்படுகின்ற போது இஸ்லாத்தினை முன்மாதிரியினை விதைக்க முடியும்.பரீட்சகை்கு முன்னர் தான் பரீட்சை எழுதிய பினனர் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாட முன்வந்துள்ளமையானது உங்களது ஆர்வத்தை காட்டி நிற்கின்றது.இது வரவேற்க கூடியதாகுமு்.

குறிப்பாக நாம் பிரதி நிதித்துவப்படுத்தும் கூட்டுறத்துறை  சார்ந்த விடயங்களை ஒரு பாடமாக கற்றுத்தர முடியும். அவ்வளவுக்கு இதனது ஆழ அகலம் பொதிந்துள்ளது.குறிப்பாக வட்டியற்ற செயற்பாடுகளுடன் கூட்டுறவு அமைப்பு செயற்படுவது தொடர்பில் உலமாக்களுக்கு விளக்கமளிப்பது மிகவும் பொறுத்தமாகும்.

எமது இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கம் சகல துறைகளிலும் உள்ள இளைஞர்களை உள்வாங்கி அவர்களின் திறமைகளுக்கு களம் அமைத்து கொடுக்கும் வேலைகளை ஆரம்பிப்பதுடன்,எதிர்காலத்தில் சில துறைகளுக்கான கற்றல் ஊக்குவிப்பு  வழிகாட்டல் தொடர்பிலும் கவனம் செலுத்தவுள்ளதாகவும் இதன் போது இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும்,நுகர்வோர் கூட்டுறவு சம்மேளனத்தின்  பணிப்பாளருமான எஸ்.எம்.முஹம்மத் றியாஸ் கூறினார்.

1 comment:

  1. How could do This?
    Think about Arabic colleges now?
    Think about their syllabus now ?
    Think about subjects now ?
    Think about who go into Arabic colleges?
    Think about quality of teaching
    Think about all this?
    Yes I agree with you ..
    I do not like to call someone فقيه today if he does not have ..
    Knowledge of modern geopolitics; modern economics; modern politics; modern financial system and so on..
    We live in a different world ..
    If some does not know to talk about this world and it's problems ..
    Let him be a jurist of the past not the present .

    ReplyDelete

Powered by Blogger.