அஷ்ரபின் மரண அறிக்கையை வெளியே, வழங்கக்கூடதென எனக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது - பேரியல் அஷ்ரப்
தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் எவ்வாறாயினும க நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் பெரிதாகத்தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்க ஒன்றுமே இருக்கவில்லை என முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார் .
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார் .
அவர் அதில் தொடந்து கருத்துத் தெரிவிக்கையில் .தலைவர் மரணித்து இன்றுடன் 18 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் சிலருக்கு தேவைக்கு ஏற்ப தேர்தல் காலங்களில்.மட்டும் தலைவரின் ஞாபகம் வரும் .தலைவரின் மரணத்தில் சந்தேகம் உண்டு என்று கூறி ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்று முதலில் கோரிக்கை விடுத்தது முஸ்லிம் காங்கிரஸே.அந்த ஆணைக்குழுவின் அறிக்கை எனக்கு வழங்கப்பட்ட்து போல் அவர்களுக்கும் அது வழங்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கையை ஒரு நிபந்தனையுடேனே எனக்கு வழங்கினார்கள் அதாவது வழங்கப்பட்ட அறிக்கையை ஊடகங்களுக்கு வழங்கக்கூடாது என்பதே அந்த நிபந்தனையாகும்.அதனை மீறி நான் செயல்படவில்லை அந்த அறிக்கையில் தலைவருக்கு வழங்கப்பட்ட ஹெலிகொப்டர் தொடர்பாகக்குறிப்பிடப்பட்டிருந்தது.தலைவர் பிரயானம் செய்வதற்கு முந்திய நாள் அந்த விமாபம் பழுது பாக்கப்பட்டிருந்ததாகவும் அந்த விமானம் ஓடிப்ப்ரீட்சித்துப்பார்க்கப்படவில்லை எனவும் அவ்வாறு ப்ரீட்சித்துப்பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை அஷ்ரப் அவர்கள் வழங்கவில்லை எனவும் அதில்.குறிப்பிடப்பட்டிருந்தது.எவ்வாறாயினும் குறித்த தினத்தன்று தனக்கு விமானம் வழங்க்ப்படவே வேண்டும் என்ற கண்டிப்பான வேண்டுகோளுக்கமைவாகவே அவ்விமானம் அவருக்கு வழங்கப்பட்டதாகவும் அதில் குறிப்படப்பட்டுளளது.அத்துடன் இதற்காக யாரையும் குற்றவாளியாக ஆணைக்குழு காணவில்லை கனவனை இழந்தமைக்காக எனக்கும் அமான் அஷ்ரபுக்கும் தலைவரின் தாய்க்கும் இழப்பீட்டைப்பெற ஆணைக்குழு சிபார்சு செய்திருந்தது.இவைதான் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் சாராம்சமாகும்.
இந்த அறிக்கை கிடைத்தவுடன கொழும்பிலுள்ள தலைவரின் மிகவும் நெருங்கிய நட்புக்குரிய சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரிடம் சென்று இவ்வறிக்கை சம்பந்தமாக கலந்தாலோசித்தேன் அறிக்கையை பெற்றுக் கொண்ட அவர் இரண்டு கிழமைகளின் பின்னர் இது தொடர்பாக ஒரு முடிவை சொலவதாகக்கூறிய அவர் இரண்டு நாட்க்ளின் பின்னர் என்னுடன் தொடர்புகொண்டு பேசினார் .இந்த அறிக்கையில் ஒன்றுமே இல்லை இத்ற்குப்பின்னால் நீங்க்ள் சென்றால் உங்களது நேரமும் காலமும் மட்டுமே வீணாகும் என்றம் இத்ற்குப்பின்னால் எந்த நடவடிக்கைகும் நீங்கள் செல்ல.வேண்டாம் என ஆலோசனை வழன்கியதற்கு அமைய நான் அந்த இடத்தில் நிறுத்திக் கொண்டேன்.
தற்போது சிலர் இவ ற்றை வைத்துக் கொண்டுதான் சிலர் தங்களது அர்சியலையே செய்து வருகின்றனர் .இது வேதனைக்குரிய விடயமாகும் .எல்லோருக்கும் அஷ்ரபின் புகைப்படம் தேவைப்படுகின்றது.இதற்கு எதிராக அவரது மனைவி என்ற வகையில் எந்தவித்மான நடவடிக்கையும் எடுக்க முடியாது.ஏனென்றால் அவர் எனது கனவராக இருந்தாலும் அவர் முஸ்லிம் மக்களின் பொதுச்சொத்தாகும்.சந்தர்ப்ப அரசியலுக்காக தேர்தல் காலங்களுல் தலைவரின் புகைப்படத்தை பாவிப்பது எனக்கு மனக்கவலையைத்தந்தாலும் சில நேரங்களில் எனக்கு அவை சந்தோஷத்தையும் ஏற்படுத்தியதுண்டு .நான் சிங்கபூருக்கான தூதுவராககடமையாற்றிய நேரம் தூதுவர்களுடன் ஒரு சுற்றுலா வந்திருந்தேன்.அப்போது ஒலுவிலுக்கு வரும் போது சுவர்களில் தலைவரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்படடிருந்தது.அதில் த்லைவர் வெள்ளைதலைப்பாயுடம் வெள்ளை சீலை உடை அனிந்திருந்தார் இதனைப்பார்த்த போது மிகவும் மகிழ்ச்ச்சியாக இருந்தது.
இன்று முஸ்லிம் அரசியலில் இன்றைய தலைவர்கள் லீடர்கள் அல்லாது டீலர்களாகவே செயற்பட்டு வருகின்றார்கள் .நான் தற்போது உள்ளூர் அரசியல் தொடர்பாக பெரிதாக நான் அலட்டிக்கொள்வதில்லை மாறாக தேசிய அரசியலில் நடை பெறுகின்றவற்றையே அவதானித்து வருகின்றேன் இனி நான் நேரடி அர்சியலில் ஈடுபடப்போவதில்லை தலைவருடைய காலத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு குடும்பம் போல் செயற்பட்டு வந்தது ஏதாவது பிரச்சினை என்றால் நானே இடைத்தரகராக நின்று தலைவருக்கு அவற்றைத்தெரியப்படுத்தி அவற்றைத்தீர்த்து வைப்பேன். சில நேரங்களில் நான் ஒரு ஆசிரியையுடைய ஸ்தானத்திலும் இருந்து செயல்பட்டிருக்கின்றேன் இன்று கட்சி பல கூறுகளாகப்பிரிந்து சின்னா பின்னமாகிப்போயுள்ளது.நான் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது அம்பாரை மாவட்ட்த்தில் கூடுதலான அபிவிருத்திகளை மேற் கொண்டோம்.நான் இன் மத மொழி பார்த்து ஒரு போதும் சேவை செய்ததில்லை முஸ்லிம் தமிழ் சிங்கள மக்கள் என்ற வேறு பாடின்றி எல்லோருக்கும் சமமான சேவைகளையே வழங்கியுள்ளோம்.இதனை அந்தந்த பிரதேசங்களுக்கு நேரடியாகச்சென்று பார்ப்பதனூடாக கண்டு கொள்ளலாம்.
சுனாமி அனர்த்தத்தின் போது மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்ட அம்பாரை மாவட்டத்தில் வீடுகளை இழந்த மக்களுக்காக வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பும் கடமையும் எனக்கு இருந்தது.இருப்பினும் இநத நாட்டுக்கு வந்த அத்தனை கொடையாளிகளும் தெற்கை நோக்கியே படையெடுத்தனர் .மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் சந்திரிகா அம்மையாரின் உதவியுடன் சில தன்னார்வத்தொண்டு நிறுவனங்களை அம்பாரைக்கு அழைத்துச்சென்று அம்மக்களுக்கான வீடமைப்புத்திட்டங்களை செய்து கொடுத்தோம்.கல்முனை சாய்ந்தமருது போன்ற இடங்களில்.வீடமைப்புத்திட்டங்கள் உட்பட பல் வேறு உதவிகளைச்செய்துள்ளோம்.அம்பாரை மாவட்டத்தின் பிரதிநிதி என்ற வகையிலும் சிங்கள மக்களின் வாக்குகளை கனிசமானளவில் பெற்றவள் என்ற அடிப்படையிலும் சிங்கள மக்களுக்கும் எனதுமனட்சாட்சிக்கு விரோதமில்லாத வகையிலும் சேவை செய்துள்ளேன்.
வீரமுனை திருக்கோவில் போன்ற தமிழ் கிராமங்களிலும் சில சேவைகளைச்செய்துள்ளேன்.எனது மனட்சாட்சிக்கு விரோதமாக நான் ஒரு போதும் செயல்பட்டதில்லை .சமூக நல்லிணக்கம் என்பது இன்று இந்த நாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது இத்ற்கான பங்களிப்பை வழங்க நான் தயாராகவே உள்ளேன் எனவும் தெரிவித்தார்.

Post a Comment