Header Ads



மரண தண்டனைக் கைதிகளின் ஆவணங்களை காணவில்லை - ஜனாதிபதி ஆத்திரம்

மனித உரிமைகளை பற்றி பேசுகின்ற நிறுவனக்காரர்கள் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .

போதையிலிருந்து விடுதலையான நாடு என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் இன்று (21)  முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வடக்கில் படையினர் ஒருதொகுதி காணிகள் வடமாகாண ஆளுனர் மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு ,யாழ்ப்பாணம், மன்னார் மாவட்ட செயலாளர்களிடம் வழங்கிவைக்க்பபட்டுள்ளன. இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,.

இந்தபோதைப்பொருள் எங்கள் நாட்டிற்கு மட்டும் அல்ல உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சவாலாகத்தான் இருந்து வருகின்றது.

உலகத்திலே இறுக்கமான சட்டங்கள் உள்ள நாடுகளில் போதைப்பொருளினை கட்டுப்படுத்த இலகுவாக இருக்கும் எமது நாடு ஒரு சுதந்திர ஜனநாய நாடு எதையும் சுதந்திரமாக செய்துகொள்ளமுடியும் நல்லவற்றையும் சுதந்திரமாக செய்துகொள்ள முடியும் மோசமான விடையங்களையும் சுதந்திரமாக செய்யமுடியும் .

போதைப்பொருள் வியாபாரிகள் சில நாடுகளில் அரசாங்கத்தினை கவிழ்த்து விடுகின்றார்கள் போதைப்பொருள் வியாபாரிகள் அரசியல் வாதிகளை வெளியேற்றுகின்றார்கள். இந்த வியாபாரிகள் அவர்களுக்கு தேவையான வசதியானவற்றை அரசாங்கம் ஊடாக உருவாக்குகின்றார்கள். வியாபாரிகள் தமக்கு விருப்பமான அரசியல் வாதிகளை ஆட்சியில் அமர்த்துகின்றார்கள்.  வியாபாரிகள் தமக்கு எதிரான அசாங்கத்திற்கு சதி செய்கின்றார்கள். சிறப்பாக வேலை செய்கின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக தவறான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார்கள்.

பொலிஸாராக இருக்கலாம், முப்படையினராக இருக்கலாம் மதுவரி திணைக்களங்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம் அவர்கள் சரியாக வேலை செய்தால் அவர்களுக்கு எதிராக பலமவிதமான வேலைகளை போதைப்பொருள் வியாபாரிகள் செய்துவருகின்றார்கள் இவ்வாறான உத்தியோகத்தர்களை இடம்மாற்றம் செய்வதற்கும் முயற்சி எடுக்கின்றார்கள்.

இந்த போதைப்பொருள் என்றால் உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும் இங்கு பாடசாலை மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள் எல்லோரும் இருக்கின்றார்கள் நான் முல்லைத்தீவிற்கு  ஏன் வந்தேன் இந்த போதைப்பொருளுக்கு எதிரான பேராட்டம் என்னால் இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டது அல்ல நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே இதனை தொடங்கியுள்ளேன் நான் அரச சேவையில் சிறிய பதவியில் இருக்கும் போது அந்த காலத்தில் போதைப்பொருளுக்கு எதிராக செயற்பட்டு இருக்கின்றேன்.

1989 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மதுவுக்கு எதிராக நாடுபூராகவும் பிரச்சாரம் செய்தேன் சுகாதார அமைச்சராக நான் இருக்கும் போது போதைப்பொருளுக்கு எதிராக பல தீர்மானங்களை கொண்டுவந்தேன். அன்று என்னால் செய்துகொள்ளமுடியாத பல விடையங்களை நான் ஜனாதிபதி ஆன பின்னர் சட்டதிட்டங்களை நான் கொண்டுவந்தேன் .

உடலுக்கு விசமான பல போதைப்பொருட்கள் எங்கள் நாட்டில் இருக்கின்றன உங்கள் கிராமங்களில் அனேகமான இடங்களில் கசிப்பு இருக்கின்றன. அவை எல்லாம் நச்சு தன்மை உள்ளவை அதனை குடிப்பவர்கள் மெதுமெதுவாக மரணித்து விடுவார்கள்.

போதைப்பொருள் வில்லைகள், போதைப்பொருள் தூள் என்பன நாட்டில் எங்களுக்கு சவாலாக இருக்கின்றன.

இலங்கை ஒரு தீவு உங்களுக்கு தெரியும் சட்டவிரோதமா போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு இந்த தீவிற்குள் வியாபாரம் நடத்த இலகுவாக இருக்கின்றது.

நாட்டுக்கு இந்த பொருட்கள் வருவதை தடுப்பதற்கு பல வேலைத்திட்டத்தினை செயற்படுத்தியுள்ளோம்.

இதற்கு எதிராக பொலிஸ் மற்றம் அரச அதிகாரிகள் சேவை செய்துவருகின்றார்கள் ஆனால் எல்லாவற்றையும் மீறி போதைப்பொருள் வியாபாரிகள் நாட்டிற்குள் கொண்டுவந்து விடுகின்றார்கள்.

கடந்த சிலமாதங்களில் போதைப்பொருள் கோடிக்கணக்கில் நாட்டிற்குள் கொண்டுவந்தார்கள் அவற்றையும் உத்தியோகத்தர்கள் கண்டு பிடித்தார்கள். இவ்வாறு பணியாற்றிய உத்தியோகத்தர்களை அடுத்த 28 ஆம் திகதி கௌரவிக்கவுள்ளேன்.

21ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தினை செயற்படுத்திக்கொண்டு இருக்கின்றோம். இந்த வேலைத்திட்டத்தில் கலந்துகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.

போதைப்பொருள் தொடர்பில் மக்கள் அறிவிப்பதற்காக 1984 என்ற இலகத்தினை கொடுத்துள்ளோம் சட்டவிரோமாக எங்கேயாவது போதைப்பொருள் இருந்தால் இந்த இலகத்திற்கு அழைத்து தகவலை கொடுங்கள் நாங்கள் தகவல்வழங்கும் நபர்களை பாதுகாப்பாக வைத்திருக்கின்றோம்.

நாடுமுழுவதும் போதைக்கு எதிராக பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம் நாங்கள் முல்லைத்தீவிற்கு 17 ஆவது மாவட்டமாக வந்துள்ளோம் இதற்கு முன்னர் 16 மாவட்டங்களில் வேலைத்திட்டங்களை தொடங்கிவைத்துள்ளோம்.

மதுபோதைக்கு எதிரான வேலைத்திட்டம் இன்றுடன் முடிவடையும் வேலைத்திட்டம் அல்ல இந்த ஆண்டு வேகமாக நாடுமுழுவதும் போதைக்கு எதிரான வேலைத்திட்டம் வேகமாக முன்னெடுக்கப்படவுள்ளது.

நான் பிலிப்பைன்ஸ் சென்று வந்தபோது போதைப்பொருள் தடுப்பு சம்மந்தமாக பலவற்றை அறிந்து வந்தேன்.

பிலிப்பைன்ஸ் போதைப்பொருளால் அழிந்த ஒரு நாடு அந்த நாட்டு ஜானதிபதி  செய்த வேலைகளை நான் செய்யப்போவதில்லை அதை செய்யப்போனால் அதற்கு எதிரானவர்கள்தான் இந்த நாட்டில் பலர் இருப்பார்கள்.

இந்த நாட்டில் இருக்கக்கூடிய நிறுவனக்காரர்கள் அதிகாரம் அதிகமாக இருக்கின்றது. மனிதஉரிமைகளை பற்றி பேசுகின்ற நிறுவனக்காரர்கள் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள்;.

நான் மனித உரிமைகளுக்கு எதிராக பணியாற்றுகின்றேன் என்று சொல்லி எனக்கு தண்டனை வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். சிங்கப்பூரில் இருந்து நான் வரும்போது விமானத்தில் உள்ள பத்திரிகையில் இந்த செய்தி வந்திருந்தது.

மனிதஉரிமை பற்றி கூக்குரல் போடுகின்றவர்கள் போதைப்பொருளுக்கு எதிராக அவர்கள் சத்தம் போடுவதில்லை இவர்கள் மனித உரிமை பற்றி பேசிக்கொண்டு போதைப்பொருள் வியாபாரிகளை பாதுகாக்கின்றார்கள்.

மனித உரிமைபற்றி பேசுகின்ற அந்த நிறுவனங்களுக்கு பயந்து நான் இந்த போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையினை நிறுத்தப்போவதில்லை  உங்கள் முகமூடிகளை அகற்றிவிட்டு மனிதஉரிமைகளுக்காக பணியாற்றுவது மாத்திரம் அல்ல போதைப்பொருளுக்கு எதிராகவும் செயற்பட முன்வாருங்கள் என்று நான் கூறுகின்றேன்.

இந்த நாட்டின் வறுமைக்கு மிக முக்கியமான காரணம் போதைப்பொருள், போதைப்பொருள் அதிகரித்த காரணத்தில்தான் ஏழ்மையும் வறுமையும் அதிகரித்துள்ளது.

போதைப்பொருளை அதிகளவில் பயன்படுத்துபவர்கள் ஏழை மக்கள்தான் அதன் காரணமாக அவர்கள் இன்னும் இன்னும் ஏழ்மைக்கு தள்ளப்படுகின்றார்கள் நோயாளர்கள் ஆகின்றார்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றார்கள்.

மனித உரிமைபற்றி பேசுகின்ற நிறுவனக்காரர்கள் போதைப்பொருளை பற்றி சிந்திப்பதில்லை விரைவில் பிலிப்பைன்ஸ் நாட்டின் போதைப்பொருள் தடுப்பு சம்மந்தான குழு ஒன்று இலங்கைக்கு வரவிருக்கின்றது. இதுவரை போதைப்பொருளுக்கு எதிரான வேலைத்திட்டத்தினை அடுத்த வாரத்தில் இருந்து தீவிரமாக முன்னெடுப்போம் 

நீங்கள் தெரிந்துகொள்ள இன்னும் ஒரு விசோடமான விடையத்தினை நான் கூறவிரும்புகின்றேன்.

போதைப்பொருள் விடையத்தில் வியாபாரிகள் ஈடுபட்டு அதன் பின்னர் சட்டத்தின் காரணமாக மரணதண்டனை நியமிக்கப்பட்டவர்களை தூக்கில் இடுவேன் என்று நான் தெரிவித்துள்ளதாக அண்மைக்காலத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் போதைப்பொருள் காரணமாக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் நூற்றுக் கணக்கானவர்கள் சிறையில் இருக்கின்றார்கள். அவர்களின் ஆவணங்கள் இப்பொழுது காணாமல் போயுள்ளன. மரணதண்டனை விதிக்கப்பட்டடு அவர்களை சிறையில் அனுப்பியுள்ளார்கள் என்ற அந்த செய்தி மாத்திரம் தான் அங்கு உள்ளது. இவர் மரணதண்டனைக்கு ஆழனவர் என்றுதான் அவரின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது வேறு ஒன்றும் அங்கு இல்லை. அதனுடன் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் ஒன்றுமே இல்லை நீதி அமைச்சிடமே இல்லை இதற்கான காரணம்தான் என்ன போதைப்பொருள் வியாபாரிகள் இந்த ஆவணங்களை கழவாடியுள்ளார்கள்.

இலங்கையில் இருக்கக்கூடிய சிறைக்கூடங்களில் ஒரே ஒருவரின் ஆவணம்தான் இருக்கின்றது அது பாக்கிஸ்தான் நாட்டு பிரஜையின் ஆவணம். இந்த போதைப்பொருளுக்காக பாக்கிஸ்தான் பிரஜையினை தூக்கில் இடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட இப்படியானவர்கள் ஒருவராவது இரண்டுபேராவது,மூன்றுபேராவாது அவர்களின் ஆவணங்கள் எப்படியாவது நான் தேடிகண்டுபிடிப்போன் இதற்கான நடவடிக்கையினை ஒருநாளும் நான் விட்டுக்கொடுக்கமாட்டேன்.

இதனுடன் சம்மந்தப்பட்ட ஆட்கள் பின்னணியின் பலபேர் உள்ளார்கள் அரசியல் வாதிகளும் இருக்கின்றார்கள்.அரசாங்க உத்தியோகத்தர்களும் பின்னணியில் இருக்கின்றார்கள். போதைப்பொருள் வியாபாரம் தொடர்பான எல்லா தகவல்களும் அவர்கள் கொடுப்பார்கள் எதிர்வரும் காலத்தில் நல்லவர்களை போல  இருக்கின்றவர்களை நாட்டிற்கு வெளிப்படுத்துவேன். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. Good work... our full support for this work..

    ReplyDelete
  2. Execution of death penalty is of absolute necessary to protect the society from all all notorious criminals.

    ReplyDelete
  3. If files are lost.. should question the responsible authority who was holding the files. This will bring the matter out in a chain till it goes to real culprit...

    ReplyDelete
  4. போதையை ஒலிக்க​ இவ்வள்வு பேசுபவர் தனது மகளின் பெயரிலேயே வைன் சாப் வைத்திருக்கிராரே. ஏன் முன்னால் ஜனாதிபதி அவர் ஆட்சியின் போது ஒரு அமைச்சர் வீட்டில் போதைப் பொருள் வைத்திரிந்து பொலீசாரிடம் மாட்டிக் கொண்ட​ போது உடனே அப்போதைய​ ஜனாதிபதி அவர் வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டு இது இவர் இங்கு விற்பதற்க்கல்ல வெளிநாடுக்கு அனுப்புவதற்க்கு என்று சாக்கடையை துப்பரவு செய்யாமல் பருந்து தெலித்துப் பயனில்லை.

    ReplyDelete
  5. போதையை ஒலிக்க​ இவ்வள்வு பேசுபவர் தனது மகளின் பெயரிலேயே வைன் சாப் வைத்திருக்கிராரே. ஏன் முன்னால் ஜனாதிபதி அவர் ஆட்சியின் போது ஒரு அமைச்சர் வீட்டில் போதைப் பொருள் வைத்திரிந்து பொலீசாரிடம் மாட்டிக் கொண்ட​ போது உடனே அப்போதைய​ ஜனாதிபதி அவர் வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டு இது இவர் இங்கு விற்பதற்க்கல்ல வெளிநாடுக்கு அனுப்புவதற்க்கு என்று சாக்கடையை துப்பரவு செய்யாமல் பருந்து தெலித்துப் பயனில்லை.

    ReplyDelete
  6. Weldon Mr.President we appreciated your action regarding drag dealers and users give them maximum punishment to all of them make drags free Island during your presidential periods

    ReplyDelete

Powered by Blogger.