Header Ads



"சந்திரிக்கா,, காலம் கடந்து போன இனிப்பு"

உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய பொலிஸ் திணைக்களத்தை 10 துண்டுகளாக பிரித்து வேறுப்படுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உத்தேச புதிய அரசியலமைப்பின் 254வது பந்தியில் இந்த விடயங்கள் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் போர் நடைபெற்ற போது, இந்தியா மற்றும் நோர்வே போன்ற நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இரகசியமான முறையில் உதவின. சர்வதேச சட்டத்திற்கு அமய பயங்கரவாதிகளுக்கு உதவது சட்டவிரோதம் என்பதாலேயே இந்நாடுகள் இரகசியமான முறையில் உதவின.

முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், சி.வி. விக்னேஸ்வரனின் கட்டளைகளை நடைமுறைப்படுத்தும் பொலிஸாருக்கும் ஜனாதிபதியின் கட்டளைகளை நடைமுறைப்படுத்தும் இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க புதிய கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட உள்ளதாக வெளியாகியுள்ள தககவல் குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கம்மன்பில,

சந்திரிக்கா குமாரதுங்க அம்மையார் காலம் கடந்து போன இனிப்பு எனக் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.