"ஒரு ஹாஜியாருக்கு, வைத்தியரின் நெத்தியடி பதில்" - தடுப்பூசியை தடுப்பது நியாயமா...??
2 வயது குழந்தை நிபா நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு செல்ல இருக்கிறாள். ஆனால் அதிலே ஒரு சின்ன சிக்கலிருப்பதாக எங்களது வார்டிலே உள்ள உள்ளக பயிற்ச்சி வைத்தியர் சொன்னார். அதற்கு காரணம் நான்கு மாதத்தில் போடப்பட்ட தடுப்பூசியின் பின் இந்தப் பிள்ளைக்கு வேறு வக்சீன்கள் எதுவும் இன்று வரை கொடுக்கப்படவில்லை என்பது தான்.
“இவர்கள் இப்போது வக்சீன்கள் போட மறுக்கிறார்கள். நாங்கள் எல்லோரும் பெற்றோருடன் கதைத்து விட்டோம். அவர்கள் இன்னமும் ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லை. எவ்வளவு சொல்லியும் கேட்கிறார்களில்லை, முரண்டு பிடிக்கிறார்கள், விதண்டாவாதம் செய்கிறார்கள், நீங்கள் கொஞ்சம் அவர்களோடு கதைத்தால் நன்றாக இருக்கும்” என்பது தான் அவர்களின் வேண்டுகோளின் சாரம். “Dr Ahmed please talk to them, I think it would be appropriate if you handle this due to the religious matters” என்று வேறு சொல்லி விட்டார் எமது மூத்த கண்ஸல்டன்.
முதற்கட்டமாக அந்த பிள்ளையின் தாயுடன் பேசியபோது விஷயங்கள் சில வெளிச்சத்துக்கு வந்ததுன. வக்சீன் எதுவும் போடாததற்கு மிக முக்கிய காரணம் பிள்ளையின் தந்தை என்பது தெரியவந்தது. தாய் இது பற்றி எந்த அறிவும் இல்லாத நமது ஜனாதிபதி போல இருக்கிறார் என்பதும், தந்தையோ இவைகளை போடக் கூடாது என்பதிலே கட்சியின் தலைவராக எப்போதும் நானே என்கின்ற நமது பிரதமர் போல உறுதியாக இருப்பதாகவும் தெரியவந்தது. அந்த அம்மா மிகவும் பயந்து போய் இருந்தார். ஏனெனில் அவரது ராஜ கட்டளையை மீறி வக்சீன் ஏதாவது போட்டால் தான் (விவாகரத்து)தலாக் செய்து விட்டு போய்விடுவதாகவும் வேறு பயமுறுத்தி இருக்கிறார் அந்த மனுஷன். விசயம் கொஞ்சம் விவகாரமானது என்பது புரிந்தது. “அப்படியா அவர் இன்று பகல் பிள்ளையை பார்க்க வரும்போது என்னை சந்திக்க சொல்லுங்கள் அவர் வந்ததும் நான் அவருடன் பேசிக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு நான் போய் விட்டேன்.
இது தான் நான் கண்ட வக்சீன் மற்றும் நவீன மருத்துவ எதிர்பாளர்கள் பொது இயல்பு. முரட்டுப் பிடிவாதம். அது போல இவர்கள் யாரும் தமது நிலை பற்றிய தெளிவுகளையோ அல்லது தங்கள் எதிர்ப்புணர்வின் தன்மைகள் பற்றிய ஆழமான அறிவையோ கொண்டிராதவர்கள். யாரோ ஒருவர் சொல்வதை அல்லது எங்கேயோ இன்டர்நெட்டில் பார்த்ததை மட்டும் வைத்துக் கொண்டு தங்களது நியாயங்களை, தங்களது வாதங்களை முன் வைக்கின்ற திறன் படைத்தவர்கள். பெரும்பாலானவர்கள் எதிர்ப்பாளர்களின்(anti vaccine) பக்கங்களையும் அவர்கள் சார்ந்த கருத்துக்களை மட்டுமே தேடித் தேடி படிப்பவர்களாக, பார்ப்பவர்களாக, கேட்பவர்களாக இருக்கின்றனர். விடயதானம் பற்றிய அடிப்படை உண்மைகள், இடம், பொருள், ஏவல் பற்றிய எண்ணக் கருக்கள் பற்றி கிஞ்சித்தும் கவனம் செலுத்தாதவர்கள். என்னதான் விஞ்ஞான விளக்கங்களை கூறினாலும், யதார்த்தங்களை பேசினாலும் அவைகளை அவர்கள் கண்டு கொள்வது கிடையாது. அது போல உண்மையை அறிய வேண்டும், தெளிவை பெற வேண்டும் என்கின்ற நோக்கமும் அவர்களிடம் இல்லை. ஆனால் அவர்கள் நித்தமும் விவாதம் புரிவதிலும் தாங்கள் மட்டுமே சரி என்பதை நிறுவுவதிலுமே எப்போதும் குறியாய் இருப்பார்கள்.
நேரம் மதியம் 12.20 வாட் பார்பதற்கு உற்றார், உறவினர் வரும் நேரம்.
“டொக்டர் ,அபி உதே கதாகறப்பு பேஷன்டகே தாத்தா அவில்லா இன்னவா” என்று கூறியவாறு தாதி ஒருவர் நீண்ட தாடியுடைய , தலையில் தொப்பி அணிந்த அந்தப் பிள்ளையின் தந்தையை அழைத்து வருகிறார். வந்தவருக்கு சலாம் கூறி உட்காருங்கள் என்று கதிரையை காட்டினேன்.
“நான் உங்கள வரச்சொன்னது உங்கட புள்ளக்கி வக்சின் போட வேணும் என்டு சொல்லத்தான்”
“... ம்ம்ம்ம Dr அது வந்து, வக்சீன் போற்றது கூடாது தானே , அய் சுட்டி தான் போடல்ல”
“ஏன் கூடாது?”
“Dr வக்சீன்ல எல்லாம் நல்லா ஈக்கிற உடம்புக்கு கிருமியை தானே அடிக்கிற. அய் நல்லமில்ல தானே”. என்று சிரித்தவாறு சொன்னார்.
“OK , அப்படியா நீங்க தோசை சாப்பிடுறதா?”
“ஏன் Dr?”
“இல்ல சும்மா சொல்லுங்களன்”
“ ஓம் Dr, ஈந்த வாக்குக்கு வாணிவிலாஸ் பக்கம் போனா தோசயும் உழுந்து வடையும் சாப்பிடுவன்."
“ அப்படியா! வடை, தோசை எல்லாம் இனி சாப்பிடக் கூடா ஏன்டா அது சும்மா இருக்கிற மாவுக்குள்ள கிருமி போட்டு தானே இதெல்லாம் செய்ற. சோ கிருமி போட்ட இதெல்லாம் சாப்பிற்றது கூடாது. நல்லமில்லை. சரிதானே!."
"அது வந்து Dr புளிக்கிறத்துக்கு போடுற அந்த கிருமி நல்ல கிருமி தானே, அய்ல அப்சட் ஒன்டும் இல்ல. மிச்சம் நன்மையிக்கிற,”
“OK OK. நல்ல கிருமி, நன்மை இருக்கி அதால சாப்பிடலாம் என்றால் வக்சீன்ல யும் நன்மை தாற கிருமிய போடலாம் தானே.”😊
“நசல் வராமத்தான் வக்சீன் போடுக என்டா... ஏண்ட தாத்தாட மவளுக்கு எல்லா ஊசியும் அடிச்சி ஈக்குற அப்பவும் அந்த குட்டிக்கு நோய் வந்தீக்கிற தானே Dr.?”
“உங்கட phone ஐ கொஞ்சம் காட்டுங்க ஹாஜி”
தனது ஜுப்பாவில் இருந்த galaxy duos ஐ எடுத்து காட்டுகிறார்.
“நல்ல phone தான், screen guard எல்லாம் போட்டு இருக்கீங்க. ஸோ உங்கட phone க்கு வைரஸ் பெரச்சின ஒன்டும் இரிக்காது."
ஆச்சரியத்துடன் என்னை ஏளனமாக பார்க்கிறார்.
“அதெப்படி Dr ,screen guard போட்ருக்கிய ஸ்கிரீன் ல scratches வராம, கீழ புழுந்தாலும் உடையாம பாக்க, வைரஸ் வராம ஈக்க வைரஸ் காட் தானே போடணும்” என்று விளக்கவுரை வழங்கியவரை இடையில் நிறுத்தி
“அது மாரித்தான் இதுவும் வக்சீன் போட்டா வக்சீன் போட்ட நோய் தான் வரமாட்டாது மற்றய சாதாரண நோய்கள் வராமல் வக்சீன் பாதுகாக்க மாட்டாது”. என்று நான் சொன்ன போது.. கொஞ்சம் தடுமாறிவராக “இல்ல Dr அந்த வேக்சின் எல்லாம் போட்டா சைட் எபக்ட் எல்லாம் வருதாமே”என்று மீண்டும் கேட்டார்.
“நீங்க திறீவீல் இனி ஓட்ட வேணாம் ஹாஜி ஏன்னா திறிவீல் ஓட்ற நிறையப்பேர் அக்சிடன் பட்டு மண்டையெல்லாம் உடைஞ்சி மூளை எல்லாம் வெளியாகி சாகுறாங்க. பாவம் நீங்களும்…. அதான் ஓட்ட வேணாம் என்டு சொல்றன்."
"என்ன Dr இப்புடி பேசுற, ஆயிரம் பேர் திறீவீல் ஓட்றாங்க அய்ல ஒருத்தர் ஒரு ரெண்டு பேர்தான் இப்படி எகஸிடன்ட்ல அம்புற்றாங்க, அதுக்காக தொழில உட ஏலுமா Dr.!"
“அப்படித்தான் ஹாஜி லட்சக்கணக்கான ஆக்களுக்கு வக்சீன் போடக்கொள்ள இப்படி ஒன்று ,ரெண்டு பேருக்கு சைட் எபக்ட் வாற அதுக்காக எல்லாருக்கும் வக்சீன் போடப்போடா என்கிறது எப்படி நியாயம்!"🙂
“எல்லாம் சரி Dr . எனக்குத் தெரிஞ்ச மாஸ்டர் ஒராள் அவர்ர புள்ள ஓன்டுக்கும் இண்டவரைக்கும் எந்த ஊசியும் போட்டு இல்ல. மாஷா அல்லாஹ் அந்த புள்ளவளுக்கு எந்த வருத்தமும் இல்ல, அப்படின்னா ஊசி போட தேவையில்லை தானே டாக்டர்”.
“ஓகே நல்ல விஷயம். என்கிட்ட ஒரு பைக் இருக்கு அதுக்கு ஹோர்னுமில்ல, பிரேக்கும் இல்லை ஆனா மாஷா அல்லாஹ் இவ்வளவு நாளும் ஒரு அக்சிடெண்ட்டும் ஆகியில்லை, நீங்களும் உங்களுடைய திறீவீல்ற பிரேக்கை களட்டி உடுங்க ஹாஜி."
“அஆ எப்படி Dr! உங்கட பைக்குக்கு பிரேக் இல்லாட்டியும் ஹோர்ன் இல்லாட்டியும் மத்தவங்களுக்கு இருக்குதானே அய்தான் நீங்க ஆக்சிடென்ட் படாம தப்பி இருக்கீங்க. இப்டி எல்லாரும் பிரேக்க கழட்டி விட்டா நல்லாத்தான் ஈக்கும்.”
“அதான் ஹாஜி ஒராள் ரெண்டாள் வக்சீன் போடாட்டியும், மத்த எல்லாரும் வக்சீன் போட்றிக்கிறதால அவங்க நோய் வராமா தப்புறாங்க. இப்படி எல்லாரும் வக்சீன் போடாட்டி பிரேக்க கழட்டின கத தான். ”😊
“எல்லாம் சரி Dr , நோய் வந்தா மருந்து செய்யலாம். நோய் வராம ஏன் நாம தடுப்பூசி போடணும். அல்லாஹ் தானே நோய் வராம பாதுகாக்கிற".
“அப்படியா ஹாஜி, நீங்க கீழ போய் முதல்ல உங்கட திறீவீலற லொக் பண்ணாம கீய அதிலயே வச்சிட்டு வாங்க, அல்லாஹ் பாத்துக்குவான். மிச்சத்த அதுக்கு பொறகு பேசுவம்.
திறீவீல் காணமப் போனா பொறகு பொலிஸால புடிக்க ஏலும் தானே, என்னா."😊
இதைக் கேட்டதும் அப்படியே ஆடிப்போய்விட்டார். இந்த உரையாடல்களை சத்தமில்லாமல் பக்கத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த அந்த தாயின் முகத்தில் ஒரு வகை இனம் புரியாத சந்தோஷம்.
“Dr உங்களோட கதச்சி வெத்த ஏலா என்னமாவது செயுங்கோ”
“இங்க பாருங்க ஹாஜி கதைச்சி வெல்றதற்கு என்ன விவாத போட்டியா நடத்திறம். நீங்க உண்மைய விளங்குங்க ,வக்சீன் பத்தி தெளிவா தெரிஞ்சுக்கோங்க.வீட்ட போய் நல்லா யோசிச்சு நாளைக்கு வந்து முடிவை சொல்லுங்க. இன்னும் டவுட் ஏதும் இருந்தா நாளக்கி காலையில வந்து சந்திங்க , நீங்க ஓகேன்னா நாம திரும்பவும் பிள்ளைக்கு வக்சீன தொடங்கலாம்” என்று சொல்லி அவரை வழியனுப்பி வைத்தேன்.
இன்று காலை அந்த அம்மா சொன்னார் “ Dr அவர் இன்டைக்கி வரமாட்டாராம், புள்ளக்கி நல்லமன்டா ஊச போடட்டாம்”.
பிற் குறிப்பு - இந்தப் படத்தில் உள்ளது ஒரே ஒரு மாடு தான் என்று யாராவது சொன்னால் அவர் மாடு பற்றி எந்த அறிவும் அறிவும் அனுபவமும் இல்லாதவர் .அதுபோல யாரெல்லாம் மாட்டின் உருவத்தையும் அதன் அளவையும் அனுபவம் மூலம் கண்டு இருக்கின்றார்களோ அவர்கள் ஒரு போதும் இங்கே இருப்பது ஒரு மாடு தான் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் யாரெல்லாம் மாடு பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் மாடு என்பது ஒரு தலையையும் நான்கு கால்களையும் ஒரு வாலையும் கொண்ட ஒரு மிருகம் என்று படித்து மட்டும் இருக்கிறார்களோ அவர்களுக்கு இது ஒரு மாடு தான்.
- Dr PM.Arshath Ahamed MBBS MD PEAD
Lady Ridgeway Hospital
Good, a studied article. What I want, ACJU should enlighten Public about the importance of vaccination & to get vaccinated in light of Islam & Science.
ReplyDeleteGood, a studied article. What I want, ACJU should enlighten Public about the importance of vaccination & to get vaccinated in light of Islam & Science.
ReplyDeleteஇந்த கட்டுரையாளர் ஒரு பெரிய பருப்பு மாதிரி ஒரு முட்டாள நான் எப்படி கையான்டன் என்ற மிதப்பில் மாத்திரமே எழுதியிருக்கிறார்.
ReplyDeleteஅதை தான்டி இந்த வக்சீன் பற்றை இருக்கிற நியாயமான அச்சங்கள், அதன் உலகலாவிய நோக்கங்கள் பற்றி எதையுமே குறிப்பிடவில்லை, இந்தியாவில் ஏழை மக்கள்மீது பில்கேட்ஸ் நடத்திய வக்சீன் கொலைகள், வக்சீன் இன்றைய வியாபார உலகில் வகிக்கும் முக்கியத்துவம் எதுவும் அறியாமல் உன்மையான் முட்டாளாக ஆகியிருப்பது அந்த அறிவாளி வைத்தியர்தான்.
நல்லா சொன்னீங்க டாக்டர்...... நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!
ReplyDeleteWell explained, Hope this will help to some people to understand the fact.
ReplyDeleteமாட்டூ கதை jaffnamuslim .com பொறுத்தமட்டில் ,,,,,,,,,,,,,,,,,.....
ReplyDeleteDr Arshath
ReplyDeleteIt's an eye opening article for those half baked morons and the innocent mothers.
As this seen only in a particular site, reaching of the above message to the needy mothers is a must.
I would suggest to commence a program of awareness in every villages and towns through voluntary organisations.
Will anyone suggest ideas and tips to organize such programs islanwide.
excellent
ReplyDeleteஅது சரி தான், இந்த மருந்துகளை தமது அறிவியிலால் கண்டுபிடித்த மேற்கு நாடுகளும் இஸ்ரேலியர்களும் நன்றியும் கூறுங்கள்
ReplyDeleteMr Ajan Antonyraj
ReplyDeleteI feel your comment for the above article is sarcastic and intimidating.
Why are you bringing Israel into this subject.
If a scientist who is from Israel has invented any successful vaccine everyone of the human being has a duty to thank him or her like vice versa others.
As a human being in this globe you respect others and human values rather than showing you as a reductions person please.
@ Ajan Antonyraj
ReplyDeleteThey dont give it to you free, Arab countries provide money to get that to you, so thanks them
இஸ்ரேல் என்கிற நாடே ஒரு முறை தவறிப்பிறந்த பிண்டம், அதற்கு ஏன் வால் பிடிக்குது இந்த......
Sorry
ReplyDeleteTyping mistake
It's RIDICULOUS not Reductions
Good explain to him and other people also change the mind themselves.
ReplyDeleteHai.. Ajan
ReplyDeleteIsraelies (JEWS) do have revelation from Prophat MOSES (peace be upon him).. who is in blood line with our Beloved Prophet MUHAMMED (pbuh) and have same grand father EBRAHAAM.
I hope JEWS are much batter than those PAGANS who worships STONES, and IDLES, STATUES and do not worship ONE TRUE GOD of ADAM, EBRAHAM, MOSES and MUHAMMED.
So you have nothing to get proud of JEWS as they are far from your beliefs.
1. ஆடு மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டை பாடிக் கறக்கணும். இதையே வைத்தியர் செய்துள்ளார். நன்றி.
ReplyDelete2. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஒன்று பட்டால் உண்டு, ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு என்று ஆரம்பப் பள்ளியிலேயே படித்து விட்டு அடுத்தவன் வெறும் வாய்க்கு அவல் கொடுக்கிற மாதிரி கமெண்ட் அடிக்காமல் ஆக்கபூர்வமாக சிந்திப்போம்.
3. வக்சீனை எதிர்க்கும் சகோதரர்கள் ஹஜ், உம்ரா போகும் போது மெனிஞ்சைடிஸ் ஊசி போடாமல் போக முடியுமோ? அப்படி என்றால் நான் ஹஜ்,உம்ரா செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்து வீட்டில் இருந்து விடுவார்களா?? விசர்நாய் கடித்தால் தடுப்பூசியோ இம்யூனோகுளோபினோ எடுக்காமல் இருப்பார்களா???.