மட்டக்களப்பு தமிழ், பிரதேசங்களில் ஹர்த்தால் (படங்கள்)
கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.ம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதைக் கண்டித்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் இன்று (25) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ் உணர்வாளர் அமைப்பால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அனுஷ்டிக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு, தமிழ் பிரதேசங்களிலுள்ள வர்த்தக சங்கங்கள், தனியார் போக்குவரத்து சங்கங்கள் ஆதரவு வழங்கியிருந்தன.
இம்மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு சில மாணவர்கள் செல்லவில்லையென்பதுடன், அரச, தனியார் வங்கிகளும் முடங்கியிருந்தன. வர்த்தக நிலையங்கள், சந்தை ஆகியனவும் பூட்டப்பட்டனுடன், வீதிகளில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகக் காணப்பட்டது.
எனினும், சில அரச திணைக்களங்கள் திறக்கப்பட்டிருந்தமையைக் காண முடிந்தது.
இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பஸ் சேவைகள் இடம்பெறாத போதிலும், தூர பிரதேசத்துக்கான சில பஸ் சேவைகள் நடைபெற்றன.
மேலும், வீதிகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
பேரின்பராஜா சபேஷ், வடிவேல் சக்திவேல், வா.கிருஸ்ணா


சரிங்க. வெள்ளிக்கிழமை கடைகளைப் பூட்டி பகிஷகரிப்பு செய்தாச்சு. ஆனால் ஞாயிறு கடையை அதுக்குப் பதிலா தொறக்கப்படாது.
ReplyDeleteசுப்பர்
ReplyDeleteகிழக்கின் பெரும்பாண்மையான மக்கள் இந்த நியமத்தை எதிர்க்கிறார்கள்.
Well done
ReplyDeleteMr Ajan Anthony,
ReplyDeleteThese kind of hartal is spoiling the mind of the people from the Muslim community those who still support for the merger of North and East. There is no doubt about it.
Therefore tell your unruled people to think twice about it.
Good....
ReplyDeleteThanks to eastern tamils for continius prorest to step down the tyrant