கட்சிமாற கிடைத்த, பணம் உண்மையானதா..? மெசின்களை பயன்படுத்திய MP கள்
நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டாரவைப் போலவே மேலும் 123 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எஸ்.பி. திசாநாயக்க தொலைபேசி மூலம் அரசாங்கத்துடன் இணைந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி மாறுவதற்காக பணம் வழங்கப்பட்டு உறுப்பினர்கள் அழைக்கப்பட்ட சம்பவம் குறித்து பாலித ரங்கே பண்டார தொடர்ந்தும் பல தகவல்களை வெளிப்படுத்தியதைப் போன்று, அவரிடம் உள்ள ஏனைய தகவல்களையும் வெளிப்படுத்துவதாக பொதுஜன பெரமுன விடுத்த அறிவிப்பையடுத்து பாலித ரங்கே பண்டார அமைதியானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி மாறுவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டு ஆரம்பத் தொகை கிடைத்த சில உறுப்பினர்கள் தமக்கு கிடைத்த பணத்தை எண்ணுவதற்காக இயந்திரங்களைப் பயன்படுத்தியதுடன் சில உறுப்பினர்கள் தமக்கு கிடைத்த பணம் உண்மையான பணமா என்பது குறித்து தெரிந்துக்கொள்வதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டிருந்ததாக நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

For the Information of Citizen, who vote for this ...?
ReplyDelete