Header Ads



பரீட்சையின் போது வயிற்று வலி, சத்திரசிகிச்சையின் பின் O/L பரீட்சை எழுதிய மாணவன்


இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவன் வயிற்று வலியால் துடித்த நிலையில் அவருக்கு உடனடியாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பின்னர் பரீட்சைக்குத் தோற்றிய சம்பவம் இன்று -03- இடம்பெற்றுள்ளது

இச்சம்பவம் குறித்து  மேலும்  தெரியவருகையில்,

 வயிற்றுவலியால் அவதியுற்ற மாணவன்  அம்பாறை மாவட்டம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மாணவனுக்கு ஏற்பட்டுள்ள உபாதையின் தீவிரத்தையறிந்து கொண்ட சத்திர சிகிச்சை நிபுணர் முஹம்மத் சமீம் அந்த மாணவனுக்கு உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொண்டதன் பயனாக மாணவன் இம்முறை க.பொ.த.சா.த பரீட்சைக்குத் தோற்ற முடிந்துள்ளது.

இது குறித்து சத்திரசிகிச்சை நிபுணர் முஹம்மத் சமீம் தெரிவிக்கையில்,

சாதாரண தர பரீட்சையை எழுதவிருக்கும் மாணவனொருவன் வலது பக்க அடிவயிற்று நோவுடன் வைத்தியசாலைக்கு வந்தார். அவரைபட பரிசோதனை செய்தபோதது அவருக்கு குடல் வளரி உபாதை தீவிர நிலைமைக்கு வந்துள்ளதால் உடனடியாக சத்திர சிகிச்சையை செய்ய வேண்டும் என்று நான் கூறியதற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்து அவர்களுடைய அனுமதியை எழுத்து மூலம் வழங்கினர்.

அம்மாணவனின் வயிற்றினுள் குடல் வளரி வீங்கி வெடிக்கும் நிலையில் காணப்பட்டது.

சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து மாணவனும் சுகமாகி திங்கட்கிழமை முதல்நாள் பரீட்சைக்கும் தோற்றியுள்ளார். பரீட்சை விடுபட்டுப் போகாமல் அவர் சிகிச்சை பெற்று பரீட்சைக்குத் தோற்றியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆகவே நமக்குள்ள உபாதை குடல் வளரிதான் appendicitis என்று உறுதியானால் உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்வதுதான் சிறந்தது.

அவ்வாறு  குடல் வளரியை கவனிப்பின்றி விட்டு விட்டால் பின்னர் எவ்வாறேனும் அது வெடித்தால் அதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

எனவே மாணவர்களுடைய கல்வி உடல் சுகாதாரம் தொடர்பில் பெற்றோர்கள் அக்கறையுடன் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

2 comments:

  1. I really appreciate for the service extended by Dr. Sameem.
    Some people are criticising him, but I don’t believe it. He treated may father with quick and accurate decision which help to serve my father with the blessing of Almighty Allah.

    Rizvi from Nintavur (Currently at Abu Dhabi)

    ReplyDelete
  2. இலங்கையில் நடந்த முதலாவது
    சத்திர சிகிச்சை
    well done dr sameem

    ReplyDelete

Powered by Blogger.