மகிந்தவுக்கு 5 நிமிட, வேலை மாத்திரமே உள்ளது
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு மஹிந்த ராஜபக்ஸவுக்கு 5 நிமிட வேலை மாத்திரமே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலாலேயே இன்றைய பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்ற எண்ணத்தை மஹிந்த விடுத்து சட்டவிரோத பிரதமர் பதவியிலிருந்து அவர் பதவி விலகவேண்டுமெனவும் சம்பிக்க ரணவக்க பதிவிட்டுள்ளார்.

Post a Comment