"உனது இழிசொற்கள் எனக்குப் பொருந்தாது, அவற்றை நீயே பெற்றுக்கொள்" - மைத்திரிக்கு ரணில் பதிலடி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்காக தாம் மிகுந்த கவலைப்படுவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஜனநாயகத்திற்காக தொழில்துறையினர் என்ற தொழில்வான்மையாளர்களின் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
நாம் அனைவரும் இணைந்து அப்பம் ஒன்றை சுட்டோம், ஜனநாயகம், ஊழல் ஒழிப்பு, நல்லிணக்கம் ஜனநாயகம் ஆகியனவற்றை இந்த அப்பம் நிலைநாட்டும் என்றே நாம் நினைத்தோம்.
நல்லதொரு சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்கிலேயே நாம் இந்த பயணத்தை ஆரம்பித்தோம்.
எம்மிடமும் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதனை நான் ஒப்புக்கொள்கின்றேன்.
நாட்டின் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தற்பொழுது சுயாதீனமாக இயங்கி வருகின்றன.
நேற்றைய தினம் சுதந்திரக் கட்சியின் மாநாடு நடைபெற்ற போது, அதன் ஸ்தாபகர் எஸ்.டபி;ள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க பற்றியோ கட்சி பற்றியோ பேசப்படவில்லை.
மாறாக ரணில் விக்ரமசிங்க பற்றியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகமாக பேசினார்.
நான் சுதந்திரக் கட்சியில் ஒருநாள் கூட அங்கத்துவம் வகித்தது கிடையாது. நான் அரசியல் சாபம் என்றார், என்னை திட்டினார், என்னை மிகவும் இழிவாக வசை பாடினார்.
என் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நான் நிராகரிக்கின்றேன். என் மீது ஜனாதிபதி சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு எனது கலாச்சாரத்தின் அடிப்படையில் பதிலுரைக்கின்றேன்.
எனக்கு வேறு யாரினதும் கலாச்சாரம் பற்றி பேச முடியாது. பௌத்த மதத்தின் ஆகோச சூத்திரத்தின் அடிப்படையில் நான் பதிலுரைக்கின்றேன்.
கௌதம புத்தரை ஆகோச என்ற நபர் சென்று திட்டினார், இழிவுபடுத்தினார், மிகவும் மோசமாக தூற்றினார்.
இவை அனைத்தையும் மிகவும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த புத்த பெருமான், ஆகோசவிடம் இவ்வாறு கூறினார், “ உனக்கு உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் இருக்கின்றார்களா” என்றார். அதற்கு ஆகோச “ஆம்” என்றான்.
“உனது வீட்டுக்கு அவர்கள் வந்தால் உணவு அளித்து உபசரிப்பாயா” என்றார் அதற்கு அவன் “ஆம்” என்றான்.
“அந்த உணவுப் பொருட்களை குறித்த உறவினர் சாப்பிடவில்லை என்றால் அதனை என்ன செய்வாய்” என்றார் அதற்கு “நான் சாப்பிடுவேன்” என்றான்.
“அப்படியானால் நீ இவ்வளவு நேரம் என்னைத் திட்டியதற்கு எனக்கும் தொடர்பு கிடையாது உனது இழி சொற்கள் எனக்கு பொருந்தாது எனவே அவற்றை நீயே பெற்றுக்கொள்” என்றார் புத்த பெருமான்.
அதேபோன்று நானும் என்னைத் திட்டிய ஜனாதிபதிக்கு அனைத்தையும் நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

MY3 IS DOING A GOOD THING FOR RANIL BY ATTACKING LIKE THIS.EVEN A MAN WHO IN NOT A SUPPORTER OF UNP WILL FEEL SORRY FOR RANIL AND HE WILL GAIN SYMPATHY AND SUPPORT.
ReplyDelete