Header Ads



மகிந்த அணி, நாளையும் விடுமுறை எடுக்கிறது

பாராளுமன்றம் நாளை புதன்கிழமை 10.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

இந்நிலையில் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் குறித்த பதவிநிலைகளை வகிப்பதை நிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (03-12-2018) இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது.

இந்நிலையில் நாளை கூடுகின்ற பாராளுமன்ற அமர்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கமாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. வாரத்துக்கு ஒரு முறை தான் உங்களுக்கு பாடசாலை. அதிலும் லீவா...?

    ReplyDelete

Powered by Blogger.