மைத்திரி படுகொலை சதித்திட்ட பிரதான சூத்திரதாரி ரணில், திட்டம்தீட்டியவர் பொன்சேகா
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு சூழ்ச்சித் திட்டம் தீட்டிய பிரதான சூத்திரதாரி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஊழல் ஒழிப்பு படையணியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நாமல் குமார இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அம்பாறையில் இன்று -05- நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது நாமல் குமார இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
ஜனாதிபதி மைத்திரி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்யும் சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள்.
பிரதான சூத்திரதாரி ரணில் விக்ரமசிங்க என்பதனை நான் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன். இந்த சதித் திட்டத்தினை திட்டமிட்டவர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவாகும்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா ஆகியோரும் இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் செயற்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி பதவி வெற்றிடமாகினால் நாடாளுமன்றில் பெரும்பான்மை பலமுடையவர் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என அரசியல் அமைப்பில் ஓர் சட்டம் உண்டு என பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா என்னிடம் கூறியிருந்தார்.
இந்த கொலைச் சதித் திட்டத்தின் பிரதான சூத்திரதாரி ரணில், திட்டம் தீட்டியவர் சரத் பொன்சேகா, பொலிஸ் மா அதிபர் பூஜித், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா ஆகியோரும் இந்த சதித் திட்டத்துடன் தொடர்புபட்டிருக்கின்றார்கள் என நாமல் குமார குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியல் சித்து விளையாட்டு , நீ எப்போது குதிக்கப் போகின்றாய் சாக்க்டை அரசியலில்?
ReplyDeleteஇதுவெல்லாம் பெரிய விடயமில்லை தலைவர் என்றால் எப்போதும் எதிரிகள் இருப்பார்கள் சில நேரங்களில் கொலை சதிகளும் நடக்கும் அவ்வாறான நிலைமைகள் வரும் என்றபடியால் தான் ஜனாதிபதிக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படுகின்றன.எது எப்படியோ தற்போதைய ஜனாதிபதிக்கு நிறைய கொலை பயம் இருக்கின்றன முதலில் மஹிந்த 6 அடி கீழே போட்டு இருப்பார் என்னைய பிறகு இந்தியா ரோவ் கொலை செய்ய சதி செய்யப்பட்டன என்றும் இப்போது இறுதியாக ரணில்,பொன்சேகா கூட்டு முயச்சி அவரை படுகொலை செய்ய என்றும் தொடருகின்றன.
ReplyDeletewhy we need police and CID? this gentleman enough for the country defense. he knows everything more than our CID.
ReplyDeleteCan not trust any one... Every one talks what they feel..
ReplyDeleteStatements without evidences can will not be accepted by people any more.. Even if it come from MY3, MR, RNL or any other parliament member or Any officials. Because every one lies for their own benefits these days.