Header Ads



DIG லதீப்பின் நேரடி கண்காணிப்பில் 30 அமைச்சுக்களுக்கு STF பாதுகாப்பு

அமைச்சுக்கள் 30 இற்கு தொடர்ந்தும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில், விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீபின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்பொழுது நிலவும் அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களாக அமைச்சுக்களுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   DC

No comments

Powered by Blogger.