Header Ads



அரசியல் குழப்பதாரிகளின் சொத்துக்களை, முடக்க வெளிநாடுகள் திட்டம்


அரசியல் நெருக்கடி தொடருமானால், இதற்குக் காரணமான அரச தரப்பைச் சேர்ந்தவர்கள் மீது பயணத்தடை, மற்றும் சொத்துக்கள் மீதான தடைகளை விதிக்கும் முடிவுகளை எடுக்க சில நாடுகள் திட்டமிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் நோக்கில், அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்ற நாடுகளே இந்த முடிவுகளை எடுக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

அரசியல் நெருக்கடிகளைத் தீர்ப்பதில் பிடிவாதமான நிலைப்பாட்டில் இருந்தால், இந்த அரசியல் குழப்பங்களுக்குக் காரணமானவர்கள் மீது பயணத்தடை விதிக்கப்படலாம் என்றும், தமது நாடுகளில் உள்ள குறிப்பிட்ட நபர்களின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்றும் இராஜதந்திர வட்டாரங்கள் கூறியுள்ளன.

No comments

Powered by Blogger.