Header Ads



மைத்திரிக்கு வந்த, கடும் கோபம் - வயலை தீ வைத்து கொளுத்தினார் - அம்பலப்படுத்தும் மகள்

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்பாவி ஆனாலும், சரியான கோபக்காரர் என அவரின் மகள் சத்துரிகா சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிசேனவின் மகள் சத்துரிகா எழுதிய “ஜனாதிபதி தாத்தா” (ஜனாதிபதி அப்பா) என்ற சுயசரிதை புத்தகத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

என் அப்பா ஒரு அப்பாவி. ஆனால் சினம் வந்ததென்றால் என்ன செய்துகொள்வார் என்று தெரியாது. அவரின் சிறு வயதில் தாத்தா மண்டையில் குட்டினார் என்பதற்காக நன்றாக விளைந்திருந்த வயலை தீ வைத்து கொளுத்தினாராம்.” என அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டார்.

சிறிசேனவின் மகள் சத்துரிகா எழுதிய “ஜனாதிபதி தாத்தா” (ஜனாதிபதி அப்பா) என்கிற நூலில் 338ஆம் பக்கத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இலங்கையில் அரசியல் நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்தி வருகிறார். இதன் காரணமாக கடந்த இரு வாரங்களாக இலங்கை அரசியலில் பெரும் பிரலயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. அப்படியானால் பாராளுமன்றத்தையும் தீ வைத்து கொளுத்திடுவாரோ.

    ReplyDelete
  2. கொஞ்சம் நல்லா பாருங்கோ அவர் கொளுத்தினது வேளாண்மையா இல்ல வெறும் வக்கலா என்டு

    ReplyDelete
  3. So we have a mentally unstable person as our prez.

    ReplyDelete
  4. சாதுமிரண்டால்....

    ReplyDelete
  5. தனது சனாதிபதி கதிரையைத் தக்கவைத்துக் கொள்ள இப்போது நாட்டையே தீயிட்டுக் கொழுத்துகிறான் பாருங்கள் Sirisena’s Belligerent Response To Speaker: Says According To Parliamentary Tradition Does Not Require Majority
    34 COMMENTS read the link: https://www.colombotelegraph.com/

    ReplyDelete
  6. இல்லை இல்லை பாராளுமன்றத்தினால் குட்டு பட்டதால் அமைதியான நாட்டையே தீ வைப்பார்

    ReplyDelete

Powered by Blogger.