Header Ads



113 Mp களின் கையொப்பஙகளை சபாநாயகரிடம் மகிந்த கையளித்தால், பிரதமராக ரணில் நீடிக்கமாட்டார்

பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கமாறு ஐக்கிய தேசியக் கட்சி, மகிந்த தரப்பிற்கு சவால் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “சபாநாயகர் கரு ஜயசூரிய மிகவும் நியாயமான முறையில் செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் ஆசனங்களை விட்டு எழுந்தால் வெளியே செல்ல முடியும் அவ்வாறு இன்றி செங்கோல் இருக்கும் பகுதிக்கு செல்லவோ குழப்பம் விளைவிக்கவோ முடியாது என்றும் கூறியுள்ளார்.

மகிந்த தரப்பினர் சபாநாயகரை அச்சுறுத்தி அழுத்தங்களை பிரயோகிக்க முனைந்ததுடன், குழப்பங்களை விளைவித்தனர்.

இதனால் வேறு வழியின்றியே சபாநாயகர் வாய்மொழி மூலமான வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மகிந்த தரப்பிற்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் மிகவும் சுலபாமன வழியில் தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.

இன்று பெரும்பான்மை பலமின்றி நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக குற்றம் சுமத்துகின்றனர்.

முடிந்தால் நாளை 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் காலையிலேயே சபாநாயகரிடம் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக ஓர் ஆவணத்தை வழங்க வேண்டும்.

அவ்வாறு ஆவணமொன்று வழங்கினால் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் நீடிக்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உடனடியாக நாம் தேர்தல் ஒன்றுக்கு செல்ல முடியாது. நாடு இருக்கும் நிலையில் அவசர அவசரமாக தேர்தலை நடத்துவதற்கு நாம் உடன்படவில்லை என்றும் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.