Header Ads



சட்டவிரோத பிரதமர் பதவியை மஹிந்த, விட்டுச் செல்லாமல் இருப்பது ஏன் தெரியுமா..?

அரசாங்க அதிகாரிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அலரி மாளிகையில் நடைபெற்ற வரும் செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் சட்டவிரோதமான அரசாங்கமொன்றே இயங்கி வருகின்றது, நாட்டில் தற்பொழுது அரசாங்கம் கிடையாது.

இந்த நிலையில் குறிப்பிட்ட சட்டவிரோத அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு துணை போகும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்.

இந்த விடயத்தை அனைத்து அரசாங்க அதிகாரிகளும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நாட்டின் பிரதான தொலைக்காட்சி அலைவரிசைகளில் அரசாங்கத்தின் சார்பில் மிகக் கூடுதலான நேரம் ஒதுக்கப்படுகின்றது.

அரை மணித்தியால செய்தி அறிக்கையில் அரசாங்கத் தரப்பிற்கு 20 நிமிடங்களும் எமக்கு 2-3 நிமிடங்களுமே வழங்கப்படுகின்றது, இது நியாயமானதா என்பதனை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

மஹிந்த ராஜபக்ச எதற்காக இந்த பதவியை விட்டு விலகிச் செல்லாமல் இருக்கின்றார் தெரியுமா?

இந்த மாத முதல் வாரம் தொடக்கம் ஜனவரி மாதம் வரையில் மிக முக்கியமான பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

கோதபாய ராஜபக்ச, பெசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, சிராந்தி ராஜபக்ச, விமல் வீரவன்ச, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பலருக்கு எதிராக வழக்குகள் விசாரணை செய்யப்பட உள்ளன.

இந்த வழக்கு விசாரணைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவே மஹிந்த சட்டவிரோதமான அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லாது நீடித்து வருகின்றார்.

நாடாளுமன்றில் யார் குழப்பம் விளைவித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஓர் பரகசியம் இதனை விளங்கப்படுத்த வேண்டியதில்லை என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. பாராளுமன்றத்தில் ஒழுங்காக நடந்துகொள்ளத் தெரியாத மிருகங்களுக்கு எதிராக முதலில் கட்சி மட்டத்தில் நடவடிக்கை எடுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.