Header Ads



யாழ் - சின்ன பள்ளிவாசல் மையவாடியை, முழுமையாக துப்பரவுசெய்ய உதவுமாறு வேண்டுகோள்

-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாண முஸ்லீம் மக்களின் மூதாதயர்கள் அடக்கம் செய்யப்பட்ட சின்ன பள்ளிவாசல் அருகே காணப்படும் மையவாடியை முழுமையாக  துப்பரவு செய்வதற்கு  நிதியுதவி  செய்யுமாறு  பரோபகாரர்களிடம் வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த கால யுத்தம் காரணமாக குறித்த மையவாடி காடுமண்டி காணப்பட்டிருந்ததுடன் மையத்துக்களை அடக்கம் செய்வதற்கு  பெரும் சிரமமாகவும் காணப்பட்டது.

இதனை அடுத்து  அம்மையவாடியை சிரமதானம் செய்வதற்கு யாழ்  மாநகர சபை உறுப்பினர் கெ.எம் நிலாம் முயற்சிகளை மேற்கொண்டு  அங்கு வாழும் தனவந்தர்களிடம் உதவி கோரி இருந்தார்.இதனடிப்படையில்   50 ஆயிரம் பணம் சேர்க்கபட்டுள்ள நிலையில் மிகுதி பணத்தினை உதவி உள்ளம் படைத்தவர்களிடம்   இருந்து எதிர்பார்க்கிறார்.

குறித்த மையவாடி முழுமையாக  முழுவதுமான துப்பரவு செய்ய  செலவு சுமார் ஒரு லட்சம் (100000) என்று பதிப்பிடப்பட்டு மும்முரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது எனினும்இதற்கான செலவீனத்தில் உதவி வழங்குவதாக தெரிவித்த பலர் இடைநடுவில் அதில் இருந்து விலகி கொண்டுள்ளனர்.இதனால் பெரும் சிரமங்களை குறித்த மையவாடி சிரமதானம் செய்வதில் சிக்கல் நிலவுவதாக  கே.எம் நிலாம்  சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே  இப்பணியினை முழுமை அடையச்செய்ய   இன்னும் (45000 ) நாற்பத்தையாயிரம் ரூபா தேவைப்படுகின்றது எனவும் இம்மையவாடியின் சிரமதானத்தை துரித கதியில் மேற்கொள்ள உதவ முன்வரும் சகோதரர்களை தன்னுடைய 0770512246 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுள்ளார்.

யாழ் சின்னப்பள்ளிவாசல் மையவாடியானது  1990ம் ஆண்டிற்கு பின் ஒருபோதும் முழுமையாக துப்பரவு செய்யப்படவில்லை என்பதுடன்  2002ம் ஆண்டிற்கு பின்னர் மீளக்குடியமர்ந்துவரும் யாழ் முஸ்லிம் மக்களின் தேவைக்கு ஏற்ப பகுதி அளவில் துப்பரவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுவந்தது.

மேற்படி மையவாடியின் பெரும்பான்மையான மிகுதிப்பகுதி கவனிப்பார் அற்று பற்றைகள் வளர்ந்து காடுபோல் காணப்பட்டது.இதனால் இப்பகுதி சுகாதார சீர்கேட்டுக்கும் தேவையற்றவர்களின் துர்நடத்தை மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கும் புகழிடமாக மாறும் அபாய சூழ்நிலைகளையும் அதனால் யாழ் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளவிருக்கும் மிக ஆபத்தான சூழ்நிலைகளையும் கருத்தில்கொண்டு இம்மையவாடி முழுமையாக துப்பரவு செய்யப்பட்டுவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments

Powered by Blogger.