Header Ads



மகிந்தவுக்கு ‘செக்’ வைக்கும் ஐதேக – புதிய வியூகம், புதிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்

சிறிலங்காவின் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக மறுத்து வரும் நிலையிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவரை பதவிநீக்க மறுத்து வரும் நிலையிலும், பிரதமர் செயலகத்தை செயற்பட விடாமல் முடக்கும் புதிய நகர்வு ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கியுள்ளது.

சிறிலங்கா பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தும் பிரேரணை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி இன்று நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முன்வைத்துள்ளது.

இந்த பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, வரும் 29ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்க நிதி ஒதுக்கீடுகளை நாடாளுமன்றமே கட்டுப்படுத்துகிறது. அந்த வகையில் மகிந்த ராஜபக்சவின் செயலகம் மற்றும் பணியாளர்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்தும் பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலம், தமது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.

ஐதேகவின் இந்த நடவடிக்கை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்குப் புதிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

Powered by Blogger.