சபாநாயகரின் துணிச்சலான அறிக்கை - அடிபணியமாட்டேன் என திட்டவட்டம்
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஊடக சந்திப்புகளை நடத்தி வெளியிட்டு வரும் கருத்துக்கள் மற்றும் தனக்கு எதிராக ஒழுங்கு செய்யப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து மூலம் தற்போதைய அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளனர்.
ஆகையினால், சபாநாயகர் என்ற வகையில் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய பெரும்பான்மைக்கு செவிசாய்ப்பது கைவிட முடியாத பொறுப்பு.
சபாநாயகரின் நிலைப்பாடு பக்கசார்பாது எனக் கூறி நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் வெளியிடும் கருத்துக்களும் எதிர்ப்புகளும் பலனளிக்காது எனவும் பெரும்பான்மை பலம் இருக்கின்றது என்பதை ஒப்புவிப்பது இந்த எதிர்ப்புகளை விட பலனளிக்கக் கூடியது.
நாடாளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட சீர்குலைப்பு நடவடிக்கைகளை அச்சமின்றி எதிர்கொண்டு ஜனநாயகத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டமை தொடர்பில் சர்வமத தலைவர்கள் உட்பட தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு வழங்கிய ஆசிகளுக்கும் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
எதிர்காலத்தில் எப்படியான அவதூறுகள், எதிர்ப்புகள் மற்றும் உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டாலும் தாய் நாட்டின் ஜனநாயகத்தை காக்கவும் எதிர்கால சந்ததியினர் ஜனநாயகமான சுதந்திர நாட்டில் வாழும் உரிமையை உறுதிப்படுத்த வாழ்நாளை அர்ப்பணிக்க போவதாகவும் சபாநாயகர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Only Justice is with you. We stopped trusting any Politicians..
ReplyDeleteWe salute your stance. Bravo!
ReplyDeleteMr.Speaker you are doing your role perfectly keep it up. definitely justice will win.
ReplyDelete