Header Ads



ஜனாதிபதி கொலை சதித்திட்டம், இந்திய பிரஜை மனநோயாளி - குற்றப் புலனாய்வு திணைக்களம்


ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜையான மர்சலீன் தோமஸை எதிர்வரும் 5ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட இந்திய பிரஜையை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பான மருத்துவ அறிக்கைக்கு அமைய அவர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அது தொடர்பான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. HOW HE GOT PASSPORT IF HE MENTAL PERSON?

    ReplyDelete
  2. மனநோயாளியை கொல்ல மனநோயாளியே சதியென்றால் அது உண்மையாக தான் இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.