Header Ads



வசிம் தாஜூடீன் படுகொலையை விசாரித்த, முக்கிய அதிகாரிக்கு இடமாற்றம் - மைத்திரி உத்தரவு

மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து தீவிரவிசாரணைகளை மேற்கொண்டிருந்த இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டமை,லசந்த விக்கிரமதுங்க வாசிம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் குறித்து  விசாரணைகளை மேற்கொண்டு மிகத்திறமையாக செயற்பட்டுக்கொண்டிருந்த நிசாந்த சில்வா கடந்த மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

புங்குடுதீவில் மாணவி படுகொலை தொடர்பில் நிசாந்த சில்வா  முக்கிய ஆதாரங்களை சேகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முப்படைகளின் பிரதானி ரவீந்திர குணவர்த்தன மற்றும் நேவி சம்பத்திற்கு எதிரான முக்கிய ஆதாரங்களை திரட்டுவதிலும் நிசாந்த சில்வா முக்கிய பங்களிப்பு செய்திருந்தார்.

மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவில் பொலிஸ்மா அதிபர் இந்த இடமாற்றத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

5 comments:

  1. "ரணில் ஆட்சிக்கு வந்த மூன்று வருடங்களாக என்னமோ விசாரிச்சு கிழிச்சிட்டாங்க, இப்போ ட்ரான்ஸ்பர் பண்ணியதால் தான் மொத்த கேஸுமே பாழாகப் போகின்றது" என்பது போல கண்ணீர் வடிச்சு வேலை இல்லை.

    ரணில் அரசாங்கம் தனக்கு வாக்குத் தேவைப்பட்ட பொழுது இறந்தவர்களின் உடல்களை வெளியில் தோண்டி எடுத்து மக்களை முட்டாள் ஆக்கியது. அதைத்தவிர வேறு ஒன்றுமே செய்யவில்லை.

    ReplyDelete
  2. Don't insult the dog which is better than My3

    ReplyDelete
  3. MY3 get exposed for his justice in this issue.

    He is working for whom, working for the sake of country and justice or for personnel interest to protect some wrong doors.

    ReplyDelete

Powered by Blogger.