Header Ads



வடிவேல் சுரேஷ் என்னுடன் இருக்கிறார் - அவர் திருட்டு அரசாங்க அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை

ஐக்கிய தேசியக்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தன்னுடன் இருப்பதாகவும், அவர் திருட்டு அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக கையெழுத்திட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வசந்த சேனாநாயக்க கையெழுத்திடவில்லை எனவும், அவரது கையெழுத்தில்லாமல் 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

வசந்த சேனாநாயக்க இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டார். வடிவேல் சுரேஷூம் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

No comments

Powered by Blogger.