ஆபாச வீடியோ பார்த்தவர்களுக்கு, எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - மேல்மாகாண முதலமைச்சர்
மேல் மாகாண சபை அமர்வின் போது, ஆபாச காணொளிகளைப் பார்வையிட்ட உறுப்பினர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென, மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப் பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண சபையின் புதிய கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ள டெப்பினைப் பயன்படுத்தியே இவ்வாறு ஆபாச காணொளிகள் பார்வையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிக நிதி செலவில் அமைக்கப்பட்டுள்ள மாகாண சபையின் புதிய கட்டடத்தில் நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற முதலாவது அமர்வின் போது, மேல் மாகாண சபையின் முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவால் வரவு செலவுதிட்டத்தை சமர்ப்பித்த சந்தர்ப்பத்தில் உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு ஆபாச காணொளிகளை பார்வையிட்டுள்ளனர்.

Post a Comment